
தமிழக மாணவர்களே...! பிரதமர் மோடியை சந்திக்க "சூப்பர் சான்ஸ்"..!
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இன்னும் 2 மாதத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு நடக்க இருப்பதால், அதனை தைரியமாகவும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார் பிரதமர் மோடி.
இது குறித்து வரும் ஜனவரி 16 ஆம் தேதி உரை நிகழ்த்த உள்ளதால், மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பையும் அளிக்கப்பட உள்ளது ,அதன்படி தமிழகத்திலிருந்து மிக சிறப்பாக கட்டுரை எழுதி சமர்ப்பிக்கும் மாணவர்களில் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 16ஆம் தேதி நடக்கும் பிரதமர் மோடி உடனான உரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவ்வப்போது ஏழை எளிய மக்களுடன் நேரடியாக பேசுவதில் ஆர்வம் தெரிவிப்பவர். அவர்களுக்கு உண்டான பிரச்சினையை கேட்டு அறிந்து கொள்பவர். இந்த நிலையில் மாணவர்களுடனும் உரையாட விருப்பம் தெரிவித்து, அந்தவகையில் இந்த வருடம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன உறுதியுடன் நம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி மாணவருடன் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.