அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இவ்வளவு அழகா.? அசந்து போன மாணவர்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Dec 21, 2019, 06:55 PM IST
அமைச்சர் ஜெயக்குமார்  கையெழுத்து  இவ்வளவு அழகா.? அசந்து போன மாணவர்கள்..!

சுருக்கம்

பள்ளி படிப்பிலிருந்தே தொடங்கிய பல சேட்டைகள் கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தே உள்ளது. கம்பு சுற்றுவது முதல் விசில் அடிப்பது வரை குறும்புத்தனமாகவும், அனைத்து  போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்.

அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இவ்வளவு அழகா.? அசந்து போன மாணவர்கள்..! 

பல அதிரடி கருத்துக்களை தன்னுடைய எதுகை மோனை வரிகள் மூலம் பதிலடி கொடுக்க கூடியவர் அமைச்சர் ஜெயக்குமார். எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும், அது குறித்து பல கேள்விகள் முன் வைத்தாலும் அனைத்திற்கும் சிரித்தபடியே சமாளிக்க கூடிய ஜெயக்குமார்.. பள்ளி படிப்பின் போதே சுறுசுறுப்பாக இயங்கி பல சேட்டைகளை செய்ய கூடியவராம்.

பள்ளி படிப்பிலிருந்தே தொடங்கிய பல சேட்டைகள் கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தே உள்ளது. கம்பு சுற்றுவது முதல் விசில் அடிப்பது வரை குறும்புத்தனமாகவும், அனைத்து  போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர். சிறப்பாக பாடும் திறமை கொண்டவர் என்பதால் கல்லூரியில் இவர் பாடும் பாடலுக்கு பல ரசிகர்கள் அப்போதே உண்டாம் ...

இப்படி ஒரு நிலையில் இன்று, மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னை ராயபுரத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை, மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார் 

அப்போது  "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" என அவர் கைப்பட எழுதிய வாசகம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பல நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று சிறப்பிக்கும் அவர், இன்று  "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்"  என எழுதியதை  பார்க்கும் போது அச்சில் எழுதியது போல் இருந்தது. அமைச்சார் ஜெயக்குமாரின் கையெழுத்து இவ்வளவு அழகாக இருக்குமா என நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அனைவரையும் பெரும்  ஆச்சர்யத்துடன் பார்த்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்