பெரிய பெரிய நிறுவனத்திற்கும் இதே ரூல்ஸ் தான்..! தமிழக அரசு அதிரடி...!

By thenmozhi gFirst Published Jan 5, 2019, 1:01 PM IST
Highlights

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள்,  பிளாஸ்டிக் தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு  பொருட்களுக்கு மாறாக உணவகங்களில் வாழை இலையையும், பார்சல் செய்து கொடுக்க துணி பையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை அந்தந்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப திட்டம் கொண்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் தயிர் எண்ணெய் மருத்துவ பொருட்களுக்கான கவர்கள் தவிர, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தட்டுகள், கப்புகள், வாட்டர் பாக்கெட் பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்த முறை தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பெரிய நிறுவனங்களின்  பிஸ்கட், நொறுக்கு தீனி,நூடுல்ஸ் உள்ளிட்ட  பொருட்களுக்கு தடை இல்லை என கூறி, சிறு குறு நிறுவனத் தயாரிப்புகளில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. 

இது குறித்து பதில் அளித்துள்ள தமிழக அரசு,அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை அந்தந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது

click me!