முகப்பருவை ஒரே இரவில் அகற்ற இதை 5 நிமிடம் வையுங்க போதும்.. !

Published : Jan 04, 2019, 05:17 PM ISTUpdated : Jan 04, 2019, 05:23 PM IST
முகப்பருவை ஒரே  இரவில் அகற்ற இதை 5 நிமிடம்  வையுங்க போதும்.. !

சுருக்கம்

நம் முகத்தில் சின்னதா ஒரு முகப்பரு வந்தால் கூட அது நம் முக அழகை கெடுக்கக்கூடும் அல்லவா..? ஆனால்  அதே முகப்பரு, ஒரு சிலருக்கு மிக அழகாக இருக்கும் என்பார்கள்.

முகப்பருவை ஒரே  இரவில் அகற்ற இதை 5 நிமிடம் வையுங்க போதும்.. ! 

நம் முகத்தில் சின்னதா ஒரு முகப்பரு வந்தால் கூட அது நம் முக அழகை கெடுக்கக்கூடும் அல்லவா..? ஆனால் அதே முகப்பரு, ஒரு சிலருக்கு மிக அழகாக இருக்கும் என்பார்கள்.

சரி வாங்க முகப்பரு வந்தால், அதை எப்படி ஒரே இரவில் விரட்டி அடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

ஆப்பிள் சிடர் வினிகர் கொஞ்சம் எடுத்துக்கோங்க. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்துக்கொண்டு, ஒரு காட்டன் கொண்டு எங்கு பரு உள்ளதோ..? அந்த பருவின் மீது கலந்து வைத்த வினிகரை கொஞ்சம் அப்ளை செய்யுங்கள். இதை அப்படியே பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள் போதும். பின்னர் நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பருவின் அளவு அப்படியே குறைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

முகப்பரு எதனால் வருகிறது?
 
தலையில் பொடுகு இருந்தாலோ, அல்லது சரும பிரச்சனை, சரியாக தூக்கம் இல்லாமல் போவது இது போன்ற காரணத்தால் முகப்பரு அதிகமா இருக்கும். சரி பிம்பிள்ஸ் வராமல் தடுக்க சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.
 
பரு இருந்தால் scrub யூஸ் செய்ய கூடாது. ஸ்வீட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள். 

மேக் அப் போட்டுக்கொண்டு இரவில் உறங்குவதை தவிருங்கள்..

அதிக படியான எண்ணெய் பொருட்களை எடுத்துக்கொள்ள கூடாது.
 
அதிகமான தண்ணீர் குடிங்க. இவை அனைத்தயும் செய்து வந்தால் போதும், முகப்பரு வருவது நின்று விடும். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்