இரண்டே நாளில் நம் கன்னத்தை பளபளப்பாக மாற்றும் "மேஜிக் ஜூஸ்" இதோ..!

Published : Jan 04, 2019, 03:04 PM IST
இரண்டே நாளில் நம் கன்னத்தை பளபளப்பாக மாற்றும் "மேஜிக் ஜூஸ்" இதோ..!

சுருக்கம்

இரண்டே நாளில் நம் முகத்தில் மேஜிக் நடப்பதுபோல பளபளப்பான சருமத்தை பெறவேண்டுமா? சொன்னா நம்பமாட்டீங்க ஆனா ஒருமுறையாவது முயற்சி செய்து பாருங்கள் வித்தியாசம் கண்டிப்பா உங்களுக்கு தெரியும்.

இரண்டே நாளில் நம் முகத்தில் மேஜிக் நடப்பதுபோல பளபளப்பான சருமத்தை பெறவேண்டுமா? சொன்னா நம்பமாட்டீங்க ஆனா ஒருமுறையாவது முயற்சி செய்து பாருங்கள் வித்தியாசம் கண்டிப்பா உங்களுக்கு தெரியும்.

வாங்க அப்படி என்ன மேஜிக் நடக்கப்போகுதுன்னு இப்ப பார்க்கலாம். தினம் தினம் நாம் மேற்கொள்ளும் வேலை,பயணம்,சிந்தனை போன்றவற்றால் நம் மனம் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும், நம் உடலும் சரிவர பார்த்துக்கொள்ள மாட்டோம்.

அவ்வாறு பார்த்துக் கொள்ளாததால் சருமத்தில் பொலிவே இல்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க இப்ப ஒரு மேஜிக் ஜூஸ் செய்யலாம் வாங்க

தேவையானவை:

2 கேரட் 


ஒரு ஆரஞ்சு


ஒரு பீட்ரூட் 


ஒரு தக்காளி


ஒரு எலுமிச்சை பழம்...அவ்வளவுதான்.  இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் நமக்கு தேவைப்பட்டால் கொஞ்சமாக இஞ்சி சேர்த்துக்கொள்ளவும். 

பொதுவாகவே நம் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது ஏன் மேஜிக் என அழைக்கிறோம் தெரியுமா?

நாம் எடுத்துக்கொள்ளும் கேரட்டில் விட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது சருமத்திற்கு சிறந்தது. இதேபோன்று ஆரஞ்சு சருமத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. இதில் சிட்ரிக் ஆசிட் அதிக அளவு உள்ளது. இது சருமத்தை பாதுகாக்கும். 

அதற்கு அடுத்தபடியாக பீட்ரூட். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி உடல் முழுக்க சீரான ரத்த சுழற்சியை மேற்கொள்ளும். உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். முகத்தில் ஒருவிதமான பளபளப்பை ஏற்படுத்தும். சொன்னா நம்பமாட்டீங்க ஒருமுறையாவது ட்ரை பண்ணி பாருங்க.. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..

போகப்போக நீங்களே இதை ஃபாலோ பண்ணுவீங்க...!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்