பிளாஸ்டிக் தடை எதிரொலி! சூடு பிடிக்கும் துணி பைகள், வாழை இலை, பாக்கு மட்டை வியாபாரம்!

By thenmozhi gFirst Published Jan 3, 2019, 6:02 PM IST
Highlights

இந்த ஆண்டு புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் பழைய துணிப்பை, வாழை இழை என முன்பு இருந்த இயற்கையான வாழ்க்கை முறை மீண்டும் உயிர்த்து எழ தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் பழைய துணிப்பை, வாழை இழை என முன்பு இருந்த இயற்கையான வாழ்க்கை முறை மீண்டும் உயிர்த்து எழ தொடங்கி உள்ளது.

அதன் படி, கேரி பேக் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக துணி பைகள், வாழை மட்டை, பாக்கு மட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது என்ற செய்தி கேட்கும் போதே விவசாயிகளுக்கு நல்ல செய்தி என தோன்றுகிறது அல்லவா..? அதுமட்டுமா .. இன்றைய  தலைமுறையிலேயே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது, கண்டிப்பாக பல்வேறு  நன்மைகளை இந்த உலகிற்கே நாம் செய்வது போன்று தான்.

தடை விதிப்பால் சில கஷ்டங்கள் இருந்தாலும் தமிழகத்தின் சிறு, குறு நகரங்களிலும், கிராமங்களிலும் பணப்புழக்கம் அதிகரிக்க செய்யும் நிலை உருவாகி உள்ளதால் கிராமத்து மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!