
ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன் படி ,ஏப்ரல் 6-ம் தேதியை தவிர்த்து மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்தலால் ஒரு வாரம் முன்கூட்டியே பள்ளிகளின் வேலை நாள் முடிவதால், அதனை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.