ஹிட்டடிக்கும் பொள்ளாச்சி படம்..! ஆனால், "என்னமா உங்க ஊர்ல இப்படியா"..? மன வலியும் கண்ணீர் துளியும் எழுத்துக்களாக உங்கள் முன்..!

By ezhil mozhiFirst Published Mar 14, 2019, 3:23 PM IST
Highlights

பொள்ளாச்சி என்றால் பாக்கு மரம் சூழ்ந்த, எங்கு பார்த்தாலும் வயல்கள்  என பச்சை பச்சேன்னு இருக்கக்கூடிய இடம். இப்படி பட்ட ஊருக்கே அவப்பெயரை தேடி தந்துள்ளனர் ஒரு சிலர் மனித மிருகங்கள்.

பொள்ளாச்சி என்றால் பாக்கு மரம் சூழ்ந்த, எங்கு பார்த்தாலும் வயல்கள்  என பச்சை பச்சேன்னு இருக்கக்கூடிய இடம். இப்படி பட்ட ஊருக்கே அவப்பெயரை தேடி தந்துள்ளனர் ஒரு சிலர் மனித மிருகங்கள்.

கடந்த ஒரு வார காலமாகவே பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து உள்ளது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளம் என  எங்கு பார்த்தாலும் பொள்ளாச்சி விவகாரம் குறித்தும், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பற்றியும் தான் செய்தியே.. அதே வேளையில் எந்த பாவமும் செய்யாத அன்றாட வாழ்க்கையை அழகான ஊரில் அனுபவித்து வரும் மக்கள் தற்போது படும்பாட்டை ஒருவர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். படிக்கும் யாராக இருப்பினும் மனம் வேதனைக்கொள்ள செய்கிறது இந்த பதிவு.

அதில்,  

இயற்கையன்னை அரவணைத்து, தென்னை மரங்களும் ,மலைகளும் அணைகளும் சூழ்ந்த அமைதிப் பிரதேசம். என்னங்க.. வாங்க.. போங்க என்ற தமிழின் மரியாதை மொழிப்பிரதேசம். இங்கே பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று பலர்கூற வாழ்ந்து வருகிறோம்.

பொள்ளாச்சியின் இயற்கை அழகை படம் பிடித்த படம் ஹிட்டடிக்கும் என்று எல்லா மொழி படக் குழுவினரும் சூழும் ஊர் இது. ஆனால் இப்போது வேறு கேமராக்களின் சூழலால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது. அருட்செல்வர்அமரர் மகாலிங்கம் வானியல் அறிஞர் அண்ணாதுரை நடிகர் சிவக்குமார் போன்றோர் பொள்ளாச்சியின் பெயரை உயர்த்திப் பிடித்தவர்கள். அதை ஒரே நாளில் குழிதோண்டி புதைத்த பெருமை திருநாவுக்கரசு மற்றும் நண்பர்களையே சாரும்.

கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள் மிக குறைந்த சதவிகிதம் உள்ள ஊர் பொள்ளாச்சி. இந்த அளவு மக்கள் தொகை மிகுந்த ஊர்களில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் கூற்று இது. திருஷ்டி பட்டது போல் உலகமே கூகுளில் பொள்ளச்சியை தேடும் தலைகுனிவான ட்ரெண்டிங்.

அவசரமாக ஊருக்கு செல்லும்போது உங்கள் மகளையோ, சகோதரியையோ.. அருகில் உள்ள வீட்டில் விட்டுச் செல்லலாம். பெண்ணை தன் கண் போல பார்த்து, மறுநாள் பரிசுப் பொருளுடன் வீட்டில் விட்டுச் செல்லும் பண்பாளர்கள் மிகுந்த ஊர் இது. ஆனால் இந்த பண்பில்லா சண்டாளர்கள். வேதாத்ரி மகரிஷி அவர்கள் அமைதியான ஊர் இது என்பதால் தான் ஆழியாரை தேர்ந்தெடுத்தார். இந்த ஊரின் அமைதி தற்போது எரிமலைக் குமுறலாய்.. என்னங்க உங்க ஊரில் இப்படியா? என்று கேட்போருக்கு..

இப்படியாக அமைந்துள்ளது இந்த பதிவு..

click me!