மக்களே...! பொள்ளாச்சி விவகாரத்தில் இந்த 4 கேள்வி உங்கள் மனதில் உள்ளதா ?

By ezhil mozhiFirst Published Mar 14, 2019, 1:33 PM IST
Highlights

தமிழ்நாடே கொந்தளிக்கும் ஒரு விஷயம் பொள்ளாச்சி விவகாரம். இதன் பின் ஒளிந்திருக்கும் அதாவது... ஒளிய வைத்திருக்கும் பலான விஷயங்கள் ஒவ்வொன்றாக தெரிந்தும் தெரியாமலும் வெளியே வருகிறது. 

தமிழ்நாடே கொந்தளிக்கும் ஒரு விஷயம் பொள்ளாச்சி விவகாரம். இதன் பின் ஒளிந்திருக்கும் அதாவது. ஒளிய வைத்திருக்கும் பலான  விஷயங்கள் ஒவ்வொன்றாக தெரிந்தும் தெரியாமலும் வெளியே வருகிறது. 

அதிமுக அம்மா பேரவை செயலாளராக இருந்த பார் நாகராஜின் அஜால் குஜால் வீடியோ நேற்று வெளியானது. அதுவும் 2 பெண்களை மிரட்டி இவருக்கு அஜால் குஜால் தேவைப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்த படியாக, செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது "நான் அவன் இல்லை" பட பாணியில் பார் நாகராஜ் வீடியோ வெளியிட்டு உள்ளார். இதனை நம்பணுமா..? இல்ல நம்ப வைப்பாங்களான்னு அடுத்த பதிவில் பார்க்கலாம். அடுத்து....

பார் நாகராஜ் நடத்தி வந்த பாரை மக்கள் சூறையாடிய வீடியோ வெளியானதை எல்லோரும் பார்த்தாங்க..அதாவது போலீசாரின் மெத்தனப்போக்கை தாங்க முடியாமல் பொறுமை இழந்த மக்கள் அவர்களால் முடிந்ததை செய்து இருக்காங்க. இங்கு என்ன கவனிக்க வேண்டும் என்றால், பார் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார், பார் நாகராஜ் பாரை அடித்து நொறுக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆக, அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது தான் பார் நாகராஜிக்கு வழங்கப்பட்ட தண்டனையாம்.அல்லவா..? 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பொள்ளாச்சி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அது சரி.  ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவே தாமாக முன்வந்து புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்து இருந்தது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கினை சிபிஐக்கு மாற்றுவதற்கான அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், என்ன படிப்பு, எந்த கல்லூரி, அவருடைய அண்ணன் பெயர் என விலாசத்தோடு வெளியிட்டு உள்ளது அரசு.. இதற்கு பெயர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா..?

இதற்கிடையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்கள் கருத்துக்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசாணையிலில் புகார் கொடுத்த பெண்ணின் அனைத்து விவரமும்  வெளியிட்டு ஆணை பிறப்பித்து உள்ளது ஒருபக்கம். இன்னொரு பக்கம் போன் செய்து புகார் தெரிவிக்க வேண்டுமாம். எப்படி பாதுகாப்பை உறுதி செய்வது..? எந்த பாதிக்கப்பட்ட பெண்ணாவது முன் வந்து புகாரை கொடுக்க முடியுமா..?

புகார் அளித்த பெண்ணின் பெயர், அவரது அண்ணன் பெயர் கல்லூரி முகவரியுடன் சேர்த்துதான் அரசாணை வெளியிட வேண்டுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதில் இன்னொரு விஷயம் என்ன வென்றால், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை கைது செய்தாலும், அவனிடம் இருந்து வெளிவந்த எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. பார் நாகராஜ் வீடியோ  வெளிவந்த பின்னரும், அவர் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்க  வில்லை.... ஆக..!

இந்த சம்பவம் குறித்த உங்களது கருத்துக்கள் மறக்காமல் கமெண்ட்ஸ் பாக்ஸில் கொடுங்கள். மக்களுக்கு எடுத்து செல்வோம். 

click me!