
மோடி மூவிங் தமிழ்நாடு ....!!! “ஹிந்தி மைல்கல்லாக” மாறிய “தமிழ் மைல்கல்”.....!!!
தமிழகம் :
தமிழகத்தில் தமிழ்தான் முதன்மை மொழி ,தாய் மொழி என்பது அனைவருக்குமே தெரியும். அடுத்தப்படியாக ஆங்கிலம் பரவலாகவே அனைவராலும் பேசக்கூடிய மொழி .....அப்படினா ஹிந்தி ? என்ற கேள்விக்கு பதில், நமக்கே தெரியும்.
மாநிலத்தை பொறுத்தவரை ஹிந்தி என்பது அரசு உயர்நிலை பள்ளிகளில் கிடையாது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஹிந்தி இரண்டாவது மொழியாக விருப்ப அடிப்படையில் மட்டுமே கற்பிக்க படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள, தமிழில் எழுதப்பட்டுள்ள மைல்கல்லை நீக்கிவிட்டு தற்போது ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள மைல்கல்லை, அந்த இடத்தில் நடப்பட்டுள்ளது .இதில் கோயம்பத்தூர் என எழுதப்பட்டுள்ளதற்கு பதிலாக, கோவை என ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் மெல்ல மெல்ல ஹிந்தி திணிப்பு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.