பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி!

By ezhil mozhi  |  First Published Mar 11, 2020, 6:47 PM IST

கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் மற்ற மொழிகளான ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது 
 


 பெயர் பலகை "தமிழில்" தான் இருக்க வேண்டும்..? "இங்கிலிஷ்" கீழே தூக்கி போடுங்க..! தமிழக அரசு அதிரடி! 

கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Latest Videos

அதாவது கடைகள் மற்றும் நிறுவனங்கள் வைக்கும் பெயர் பலகையில் முதல் எழுத்துக்கள் தமிழில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு அடுத்த படியாக ஆங்கிலமும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகளையும் வைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலார் ஆணையம் தெரிவித்து உள்ளது 

அதில்,  

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என அரசு ஆணைகள் எண் 3312, 29.12.1983 மற்றும் 499 நாள் 29.12.1984 முறையே 1948 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி அரசாணையின்படி கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் மற்ற மொழிகளான ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும் மற்ற மொழிகள் மூன்றாவது இடத்திலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது 

கடைகள் நிறுவனங்களில் பெயர் பலகை குறித்த சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் ஆணையர் முனைவர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்

click me!