தாசில்தார் கொலை எதிரொலி..! கடும் பயத்தில் மற்றொரு தாசில்தார் என்ன செய்கிறார் பாருங்கள்...! இனி லஞ்சம்..?

Published : Nov 07, 2019, 01:47 PM IST
தாசில்தார் கொலை எதிரொலி..! கடும் பயத்தில் மற்றொரு தாசில்தார் என்ன செய்கிறார் பாருங்கள்...! இனி லஞ்சம்..?

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் லஞ்சம்  கேட்டதால், கோபமடைந்த  விவசாயி அவரை அலுவலகத்திலேயே தீ வைத்து கொளுத்திவிட்டார் 

தாசில்தார் கொலை எதிரொலி..! கடும் பயத்தில் மற்றொரு தாசில்தார் என்ன செய்கிறார்  பாருங்கள்...! இனி லஞ்சம்..? 

லஞ்சம் கேட்டதால் பெண் தாசில்தார் ஒருவரை அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மற்றொரு பெண் தாசில்தார் பாதுகாப்பு கருதி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்  நின்று மனு கொடுக்கும் வகையில் கயிறு கட்டி உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் என்ற இடத்தில் விஜயா ரெட்டி என்ற பெண் தாசில்தார் லஞ்சம்  கேட்டதால், கோபமடைந்த  விவசாயி அவரை அலுவலகத்திலேயே தீ வைத்து கொளுத்திவிட்டார் 

இந்த சம்பவத்திற்கு புறகு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். இந்த ஒரு நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தாரான உமா மகேஸ்வரியை சந்திக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று மனு கொடுக்கும் வகையில் கயிறு கட்டி விடப்பட்டுள்ளது.

அதன் படி, அந்த கயிற்றின் பின்புறமாக இருந்து தான் தாசில்தாரிடம் பேச முடியும். மனு  கொடுக்க வேண்டும் என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்றபடி தான் மனு கொடுக்க முடியும். இது குறித்து உமா மகேஸ்வரி தெரிவிக்கும் போது, விஜயா ரெட்டி மரணம் எங்களுக்கு ஒரு வித பயத்தை கொடுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி கயிறு கட்டப்பட்டு உள்ளது  என தெரிவித்து உள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பிலிருந்து பல   விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

muttai satham recipe: உதிரி உதிரியாய் டேஸ்டான முட்டை சாதம் செய்வது எப்படி? ஹோட்டல் சுவையை மிஞ்சும் ரகசியக் குறிப்புகள்!
akkaravadisal recipe: ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அய்யர் வீட்டு சுவையில் அக்காரவடிசல் செய்வது எப்படி?