சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! வேதனை தெரிவிக்கும் மக்கள்..!

Published : Nov 07, 2019, 12:10 PM ISTUpdated : Nov 07, 2019, 12:18 PM IST
சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! வேதனை தெரிவிக்கும் மக்கள்..!

சுருக்கம்

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! வேதனை தெரிவிக்கும் மக்கள்..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்தும் சில  நேரங்களில் சற்று குறைந்தும்   காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று  ஒரே நாளில் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.18 உயர்ந்து 3676.00 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 30 பைசா குறைந்து வெள்ளி 49.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Toilet Paper In Fridge : பிரிட்ஜுக்குள் டாய்லெட் பேப்பர் வைப்பது ஏன்? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
Egg vs Chicken vs Mutton: முட்டை, கோழி, ஆட்டிறைச்சி: இதில் அதிகப் புரதம் எதில் உள்ளது?