
1330 திருக்குறளையும் எழுதிவிட்டு வீட்டுக்கு கிளம்பு..! பள்ளி மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை..!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சண்டையிட்டு உள்ளதால் அவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை வழங்கியுள்ளனர் பாளையங்கோட்டை போலீசார்.
பத்தாம் வகுப்பு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சண்டையிட்டு உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மாணவர்களை அழைத்து என்ன பிரச்சனை? என விசாரித்தனர். அப்போது பல விஷயங்கள் வெளிவந்து உள்ளது.
இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் கட் அடித்துவிட்டு பாளையங்கோட்டை வாஉசி ஸ்டேடியத்தில் அமர்ந்து, அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு வரும் மாணவிகளை பார்ப்பதும் அவர்களுடன் பேச முற்படுவதும் என பல வேலைகளில் குறும்பு செய்துள்ளனர்.
இது தவிர்த்து சமூக ரீதியான பேச்சும் அதனால் சில பிரச்சினைகளும் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு உதவி பெறும் இவ்விரண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் அனைவரையும் அழைத்து சென்று காவல்துறைக்கும் முன் அமர வைத்து திருவள்ளுவர் எழுதிய 1330 குறளையும் எழுதி விட்டு வீட்டிற்கு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து காவல்துறையினர் வழங்கிய தண்டனை குறித்தும் எதற்காக இந்த தண்டனை என்றும் விவரித்துள்ளனர். மாணவர்களுக்கு காவல் துறையினர் வழங்கிய இந்த தண்டனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.