Symptoms of cancer:பெண்களை குறிவைத்து தாக்கும் 6 வகை புற்றுநோய்...அபாய அறிகுறியா..? இனி அலட்சியம் வேண்டாம்..!

Anija Kannan   | Asianet News
Published : Jan 28, 2022, 12:18 PM IST
Symptoms of cancer:பெண்களை குறிவைத்து தாக்கும் 6 வகை புற்றுநோய்...அபாய அறிகுறியா..? இனி அலட்சியம் வேண்டாம்..!

சுருக்கம்

பெண்களை குறிவைத்து தாக்கும் இந்த 6 வகை புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து கொள்வது முக்கியம்.

பெண்கள் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை பெற்றால் நோயின் தீவிரத்தை பெரிய அளவில் தவிர்க்கலாம். ஆனால் எது அபாய அறிகுறி, எதை உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதில் நமக்கு குழப்பம் இருக்கலாம். அதற்கான ஒரு குறிப்பே இந்த ஆலோசனைகள். மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் ஆகியவை பெண்கள் சந்திக்கும் சில பொதுவான புற்றுநோய்களாக இருக்கின்றன.

இதில், மார்பகப்புற்றுநோய் பொறுத்தவரை இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். கடந்த  2021இல் மட்டும் உலக அளவில் 10 மில்லியன் பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. எனவே, புற்றுநோயின் இந்த 6 வகை அறிகுறிகளை பெண்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகள் இங்கே..

மாதவிடாய் காலங்களில்:

பெண்களுக்கு, மாதவிடாய் காலம் நெருங்கும்போது மார்பகப் பகுதியில் வலி ஏற்படுவது இயல்பானதே. ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் மார்பகங்கள் விரிவடைவதால் இந்த வலி ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மாதவிடாய் காலம் முடிந்ததும் இந்த வலி மறைகிறதா எனப் பாருங்கள். தொடர்ச்சியாக வலி இருப்பில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சீரற்ற மலச்சிக்கல்: 

மாதவிடாய்க்கு முந்தைய நேரத்தில் பல பெண்கள் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் மாற்றங்களை உணருகின்றனர். ஆனால் தொடர்ச்சியான மலச்சிக்கல் அல்லது நீண்ட நாள் குடல் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை ஒருவர் புறக்கணிக்க கூடாது. ஏனெனில் இது பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
 
மார்பகங்களில் சிறு கட்டிகள்:

பெரும்பாலும் நகரக்கூடிய மிகச்சிறு கட்டிகள் ஆபத்தில்லாதவையாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், சிறு கட்டிகளோ, அல்லது நீர் அல்லது திரவம் போன்ற வெளியேற்றம் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். பதற்றமடையாதீர்கள்.

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை:

பெண்கள் சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை பல நேரங்களில் எதிர்கொள்கின்றனர். சிறுநீர் பாதையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றாலும், குறுகிய இடைவெளியில் தொற்று மீண்டும் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீருடன் ரத்தம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும், ஏனென்றால் இது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாகும்.

மார்பகக் காயங்கள்:

அதிர்வான வேலைகளாலோ, மோதல்களாலோ காயங்கள் ஏற்படலாம். சில சமயம் அது வெளியில் தெரியலாம். உட்காயமாகவும் வலிக்கலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அதேபோன்று, மார்பகம் அல்லது முலை காம்பில் வலி, முலை காம்பைச் சுற்றி அரிப்பு உள்ளிட்டவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள். வழக்கமான சுய பரிசோதனை இந்த அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

 பிறப்புறுப்பில் துர்நாற்றம்:

மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் பெண்கள் தங்கள் உடலில் இருந்து ரத்தம் அல்லது துர்நாற்றம் வீசுவதை கண்டால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். உடலில் இருந்து துர்நாற்றம் வீசும் திரவம் வெளியேறுவது கர்ப்பப்பை வாய், யோனி அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

பெண்களுக்கு புற்றுநோயில் எல்லா நேரங்களிலும், அறிகுறிகள் வெளிப்படையானதாக இருப்பதில்லை. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம். சிறு கட்டிகள், அல்லது உருண்டை போன்றவை தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். பதற்றப்படாமல் இவற்றை கையாளுங்கள்.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை
கணவன் மனைவி அன்யோன்யம் குறைக்கும் '3' விஷயங்கள்