தூங்கும்போது லைட் ஆப் பண்ண மாட்டீங்களா..? அப்படியென்றால் இந்த நோய் நமக்கு தானாம்..!

First Published Jun 9, 2018, 2:49 PM IST
Highlights
switched off the light during sleep to avoid diabetes


தூங்கும்போது லைட் ஆப் பண்ண மாட்டீங்களா..? அப்படியென்றால் இந்த நோய் நமக்கு தானாம்..!

பொதுவாகவே உறங்கும் போது ஒரு சிலர் சிறிய மின்விளக்கை ஆன் செய்துவிட்டு உறங்குவார்கள்

ஒருசிலர் பளிச்சென்று லைட் ஆன் செய்துவிட்டு உறங்குவார்கள்..

வேறு சிலர், உறங்கும் போது எந்த வெளிச்சமும் இருக்ககூடாது என்பார்கள்...

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இரவு நேரத்தில், லைட் ஆன் செய்து விட்டு, அந்த வெளிச்சத்தில் உறங்கினால் எந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாமா..?

அமெரிக்கன் அகாடெமி ஆப் ஸ்லீப் மேடிசின் என்ற நிறுவனம் மின்விளக்கை  அணைக்காமல் உறங்கினால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து 20 நபர்களிடம் ஆராய்ச்சி  மேற்கொண்டது இதில் 18 முதல் 40 வயது கொண்ட நல்ல ஆரோக்கியமான நபர்களை கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

மூன்று பகல் இரண்டு இரவு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மின்விளக்கு அணைக்காமல்  உறங்கும் நபர்களுக்கு இன்சுலின் சரிவர சுரக்காமல் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இன்சுலின் சரிவர சுரக்கவில்லை என்றால் அவர்களுக்கு மிக எளிதில் சர்க்கரை நோய்  வரும் அபாயம் உள்ளது என தெரியவந்துள்ளது.

click me!