ஒரே நேரத்தில் பிடிக்கும் குடும்ப சனி...! யாருக்கெல்லாம் தெரியுமா..? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்.?

 
Published : Jun 09, 2018, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
ஒரே நேரத்தில் பிடிக்கும் குடும்ப சனி...! யாருக்கெல்லாம் தெரியுமா..? தப்பிக்க என்ன  செய்ய வேண்டும்.?

சுருக்கம்

yelarai sani affects whole family at a same time

ஏழரை சனியிலிருந்து யாராலும் தப்பித்து விட முடியாது என்பது தெரிந்த ஒன்றே....ஆனால் ஏழரை சனி என்றால் எப்போதுமே துன்பத்தை தான் கொடுக்கும் என்பது அல்ல பொருள்.

ஒரே நேரத்தில் பிடிக்கும் குடும்பசனி

ஒரு குடும்பத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே நேரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்குமாயின் அந்த குடும்பமே ஒரே நேரத்தில் கஷ்டப்படும்

அதே போன்று ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் பெரும்பாலோனோருக்கு  ஒரே நேரத்தில் கோட்சார நிலையில் ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கக் கூடாது.

இவ்வாறு நடக்கும் போது, அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரேனும் யோகமான ஜாதக அமைப்பை பெற்று இருந்தாலும் எந்த பலனும் இல்லாமல் போகும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கெடு பலன்கள் அதிகமாக இருக்கும்

யோகக்குடும்பம்

இதே போன்று ஒரு குடும்பதில் உள்ள உறுப்பினர்கள், அடுத்தடுத்த ராசியை பெற்று இல்லாமல் ஒருவர் துலாம் என்றால் மற்றொருவர் மீனம், ஒருவர் கன்னி என்றால் மற்றொருவர் மேஷம் என இருப்பார்கள்.

இது போன்று இருந்தால் தான், அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஏழரை சனி முடிந்து பின்னர் தான் மற்ற யாருக்காவது ஏழரை சனி நடக்கும். எனவே சனியின் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இதற்கு மாறாக, குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த ராசியை கொண்டவர்களாகவும், அல்லது ஏக ராசி என சொல்லப்படும் ஒரே ராசியாக இருக்கின்ற நிலையில் ஏழரை சனி அஷ்டம சனி நடக்கும் போது கடுமையான பொருளாதார சிக்கல், குடும்ப பிரச்சனை, உயிர் இழப்புகள் என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பெரும்பாடு படுத்தி விடும்.

ஏழரை சனி என்றால் என்ன ?

ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது.

துயரம், பாதிப்பு எதுவாக இருந்தாலும் ஏழரை சனியின் போது எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துக்கொள்வது தான் வேத ஜோதிடத்தின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது

இதிலிருந்து தப்பித்து கொள்வது எப்படி..?

பிறருக்கு உதவுவது, தானம் வழங்குதல்,சனிக்கிழமை தோறும் காக்கைக்கு உணவளித்தல், எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருதல்..இவற்றை தொடர்ந்து செய்து வர சனியின் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்