இந்த கட்டுரையில் டீக்கடை ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கு டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே, ஈவினிங் டைம்ல டீ, காபி குடிக்கும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் வேண்டும் என்று குழந்தைகள் மட்டுமின்றி, வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட வேண்டும் கேட்பார்கள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா..? உங்களுக்குக்கான பதிவு இது..
ஈவினிங் டைம்ல டீ, காபிக்கு ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு டீக்கடை போண்டா செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரின் இந்த டீக்கடை போண்டாவை விரும்பி சாப்பிடுவார்கள். இது சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த டீக்கடை போண்டா செய்வது மிகவும் ஈஸி. சரி வாங்க.. இப்போது, இந்த கட்டுரையில் டீக்கடை ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கு டீக்கடை போண்டா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
டீக்கடை போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு பண்டம் செய்து கொடுங்க! டேஸ்ட்டா இருக்கும்..
செய்முறை:
டீக்கடை போண்டா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த ரவை மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை கிளறிவிடுங்கள். இதனை அடுத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இன்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதை மூடி வைத்து, சுமார் அரை மணி நேரம் ஊற வையுங்கள். இப்படி ஊற வைத்தால், போண்டா பஞ்சு போல சாப்டாக வரும். அரை மணி நேரம் கழித்து அதில் ஒரு சிட்டிகை சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களிடம் சமையல் சோடா இல்லை என்றால், அந்த மாவை சுமார் மணிநேரம் ஊற வையுங்கள். இப்போது டீக்கடை போண்டா செய்வதற்கான மாவு தயார்.
இதனை அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், தயாரான மாவை ஒரு சின்ன கரண்டியில் எடுத்து, அதை எண்ணெயில் ஊற்றுங்கள். இரண்டு பக்கமும் நன்கு பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் சூடான டீக்கடை இனிப்பு போண்டா ரெடி.!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D