1 கப் கோதுமை மாவு இருக்கா..?! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த இனிப்பு பண்டம் செய்து கொடுங்க! டேஸ்ட்டா இருக்கும்..

By Kalai Selvi  |  First Published Jun 1, 2024, 4:54 PM IST

ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய, கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்


ஈவ்னிங் டைம்ல வீட்டில் இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏதாவது கேட்கிறார்களா..? உங்களுக்கு சீக்கிரமே செய்யகூடிய ரெசிபி தெரியவில்லையா கடையில் வாங்கி கொடுக்கிறீர்களா..? நீங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க வீட்ல கோதுமையும், ரவையும் இருந்தா.. அப்பம் செய்து கொடுங்கள்.  இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். ஒருமுறை செய்து கொடுத்தால் போதும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க இப்போது கோதுமை மற்றும் ரவையில் அப்பம் எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  ஈவினிங் ஸ்நாக்ஸாக சூடாகவும் சுவையாகவும் 'ஜவ்வரிசி வடை' செஞ்சி சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

கோதுமை அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
ஏலக்காய் - 2
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் - 1 சில்லு
தண்ணீர் - 1 1/4 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  நீங்கள் ஒல்லியா இருக்கிறதை வச்சு கிண்டல் பண்றாங்களா?! உடனே 'இந்த' அல்வா செஞ்சு சாப்பிடுங்க!

செய்முறை:
கோதுமை அப்பம் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு மற்றும் ரவையை சேர்த்து கிளறி கொள்ளுங்கள். பிறகு அதில் சர்க்கரை தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கிளறி கொள்ளுங்கள். இதனை அடுத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். முக்கிய குறிப்பு கட்டிகளின்றி கலக்கவும். மேலும் ரொம்பவே கட்டியாகவும் மிருதுவாகவும் இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு நீராக இருக்கவும். இப்போது கலந்து வைத்த மாவை மூடி வைத்து சும்மா அரை மணி நேரம் ஊற வையுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்த தேங்காய் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்கு ஊறி போய் இருக்கும் இந்த மாவில் அரைத்து வைத்த தேங்காய் பொடியை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் இப்போது அப்பம் சுடுவதற்கான மாவு தயார்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், தீயை குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். இருபுறமும் நன்கு வெகும்படி புரட்டி போட்டு எடுத்தால், சுவையான கோதுமை அப்பம் ரெடி!!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!