Sukran Peyarchi 2022: சுக்கிரனின் அருளால் சூப்பராக வாழும் ராசிகள்..நீங்கள் என்ன ராசி? இன்றைய 12 ராசிகளின் பலன்

Anija Kannan   | Asianet News
Published : May 04, 2022, 06:00 AM IST
Sukran Peyarchi 2022: சுக்கிரனின் அருளால் சூப்பராக வாழும் ராசிகள்..நீங்கள் என்ன ராசி? இன்றைய 12 ராசிகளின் பலன்

சுருக்கம்

Sukran Peyarchi 2022:  சுக்கிரனின் அருளால் சில ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 மே 23ஆம் தேதி மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

சுக்கிரனின் ராசி மாற்றம், ஒவ்வொரு ராசியினரின் குணாதிசயங்களும் வெவ்வேறாக இருக்கும். அனைத்து ராசிகளிலும் தங்கள் ராசி கிரகங்களின் பாதிப்புகள் இருக்கும். இருப்பினும், சுக்கிரனின் அருளால் சில ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம், நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் எல்லாம் நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம், நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம், முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை பிறக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு தேவை. 

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரனின் ராசி மாற்றம், சிறப்பாக இருக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்கக்கூடிய நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். வீடு வாங்கும் யோகம் பிறக்கும். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பான இருக்கும். தேவையற்ற மன உளைச்சல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கை அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வாழ்வில் லாபம் கிடைக்கும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்காமல் இருப்பீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். தொழில் முன்னேற்றம் காணப்படும். 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லா விஷயங்களையும் முடித்து காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். திருமண காரியங்கள் கை கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். 

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரன் பெயர்ச்சி விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். நீங்கள் நினைத்ததை நினைத்த படிமுடித்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்களுடைய நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரன் பெயர்ச்சி நினைத்த காரியம்சிறப்பாக முடியும். ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் வந்து போகும். எதிலும் பொறுமையாக இருப்பது அவசியம்.

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரன் பெயர்ச்சி சாதமாக இருக்கும். இருப்பினும், தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் மௌனம் காப்பதும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். 

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு  சுக்கிரன் பெயர்ச்சி நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். நீங்கள் இந்த நேரத்தில் நினைத்ததை முடித்து காட்டுவீர்கள். 

மேலும் படிக்க...Shani Gochar 2022: சனியுடன், செவ்வாய் கூட்டு...அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கடும் சோதனை...

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்