பிக்பாஸ் பிரபலத்தின் சுவையான சிக்கன் ஊறுகாய் ரெசிபி...இணையத்தில் ஹிட்..! நீங்களும் ட்ரை பண்ணுக்கோ..!!

By Anu KanFirst Published Feb 10, 2022, 11:34 AM IST
Highlights

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள, சுஜா வருணின் ஆந்திரா சிக்கன் ரெசிபி வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள, சுஜா வருணின் ஆந்திரா சிக்கன் ரெசிபி வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அப்படி, என்ன ஸ்பெஷல் அந்த ரெசிபியில் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுஜா வருணி. குசேலன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினர். சேட்டை உள்ளிட்ட பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களும் ஏற்று நடித்தவர். பிக்பாஸ் முதல் சீசன் இல் பங்கேற்ற இவர் முதல் வாரத்திலே ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

சில வருடங்களுக்கு முன் இவர் சிவாஜி கணேசன் பேரனான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை கமல்ஹாசன் முன்னின்று நடத்தி வைத்தார். தற்போது சுஜா வருணி மற்றும் சிவகுமார் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான். சுஜா, மகன் பிறந்து 2 ஆண்டுகளுக்கு பின்பு பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
  
இவர்  பிக் பாஸ் அல்டிமேட்டுக்கு ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாகவே, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி  அவ்வப்போது டிராவல் வீடியோ மற்றும் சமையல் குறிப்புகளை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், இவருடைய ஆந்திரா சிக்கன் ரெசிபி ஒன்று வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. அவருடைய ரசிகர்கள் பலரும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை செய்து ரிவியூக்களை கமெண்டில் பதிவு செய்கின்றனர்.  
 
அந்த ரெசிபியை எப்படி தயார் செய்வது என்பதை நாமும் பார்த்து தெரிந்து கொள்வோம். சுஜா, விஜய் பாடலுடன் ஆரம்பித்தார். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1\2 கிலோ 

எண்ணெய் - 4 டீஸ்புன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்புன் 

உப்பு  - தேவையான அளவு 

மிளகாய் தூள் - 2 டீஸ்புன் 

மிளகு தூள் - 1 டீஸ்புன் 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்புன் 

எலுமிச்சை சாறு - 1\2 லெமன் 

செய்முறை:

1. முதலில் 1\2 கிலோ சிக்கன் எடுத்து சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

2. பின்பு அடுப்பில் தவாவை வைத்து அது சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வறுக்க வேண்டும். சிக்கனில் இருக்கும் தண்ணீர் நன்றாக முழுவதும் வடியும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும்.

3.இப்போது, மற்றொரு தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக ரோஸ்ட் பண்ணி எடுக்க வேண்டும். சிக்கன் ஆரஞ்சு கலர் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

4. பிறகு, மீதமுள்ள எண்ணெயை நன்றாக வடிகட்டி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்போது அதில் பொரித்த சிக்கன், போட்டு அதுடன் 1 டீஸ்புன் கரமசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

5. இப்போது எண்ணெய் தனியாக பிரிந்து வந்த உடன், அதில் 4- டீஸ்புன் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

4. கொதித்த பின்பு அதை ஆற வைக்க வேண்டும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் போதும் சுவையான ஆந்திரா சிக்கன் பச்சடி ரெடி.

இதை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணுக்கோ. சந்தேகம் இருப்பின் (SuShi's Fun) என்ற யூடியூப் தளம் சென்று பார்க்கவும்.


 

click me!