
உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ரொமான்டிக் வாரத்தின் நான்காம் நாளான இன்று பிப்ரவரி 10 -ம் தேதி டெட்டி தினம் ஆகும்.
காதலர் தினம் ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் மறக்க முடியாத தருணத்தை நினைவு கூறும். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் என்ற ஒன்று கடந்து சென்றிருக்கும். காதலிக்கவே இல்லை என்று சொல்பவர்கள் குறைவுதான். இந்த நாளில் உங்கள் மனம் கவர்ந்தவர்க்கு டெட்டி பொம்மை வாங்கி தர வேண்டும். இதனால் நமது உறவு மேலும் வலுப்படும்.
பிப்ரவரி மாதம் தொடங்கி, விட்டாலே போதும். இளசுகள் மனது சிறகடித்து பறக்கும். ஒவ்வொரு நாளும் காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், பரிசு ஒன்றை பரிமாறிக்கொள்வார்கள். இந்த நாட்களுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம். தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தின வாரத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாட்களில் காதலை வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 10-ம் தேதி டெட்டி தினம் (teddy day)
இந்த டெட்டி பியர்கள் கள்ளம் கபட மற்றது மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக இதை பிறருக்கு நீங்கள் வழங்கலாம். இந்த டெட்டி பியர்கள் ஒருபோதும் பூக்களைப் போல காய்ந்துவிடாது. உங்கள் காதலை எப்போதும் நினைவூட்டுவதால், பல ஆண்டுகளுக்கு இதை நீங்கள் உங்களுடனே வைத்திருக்க முடியும். இவை உங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு அருமையான பொருளாகவும்.
இன்று ஏன் டெட்டி வழங்க வேண்டும்:
டெட்டிகள் ஒரு உள்ளார்ந்த அழகைக் கொண்டிருக்கிறது, விவரிக்க முடியாத அப்பாவித்தனம் அவற்றில் பொதிந்துள்ளது. இந்த டெட்டி பியர்கள் கள்ளம்கபடமற்றது மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக இதை பிறருக்கு நீங்கள் வழங்கலாம்.
குறிப்பாக, பெண்களுக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இரவில் கட்டியனைத்து தூங்கவும் செய்வார்கள். எனவே உங்கள் நினைவாக டெட்டிப் பியர் வாங்கிக் கொடுத்தால் நீங்கள் இல்லாத சமயத்தில் டெட்டியைக் கொஞ்சுவார்கள். உங்களுக்கு உங்கள் பார்ட்னரின் முத்தம் வேண்டும் என்றால், பெரிய அளவிலான டெட்டி பியரை வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்.
கலர்களின் முக்கியத்துவம்:
உங்கள் காதலை நீங்கள் விரும்பும் நபர் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு ஒரு பிங்க் கலர் டெட்டி பரிசாக கிடைக்கும். அல்லது நீங்கள் விரும்பும் பெண் இந்த பிங்க் கலர் டெட்டியை ஏற்றுக்கொண்டால் உங்கள் காதல் ஓகே என்று அர்த்தம்.
சிவப்பு டெட்டி என்பது, நீங்கள் தெரிவிக்க விரும்பும் அன்பைக் குறிக்கிறது. இது ஒரு உறவில் அன்பின் தீவிரத்தை வலுப்படுத்துவதாகும்.
ஆரஞ்சு என்பது மகிழ்ச்சி, நேர்மறை, நல்ல வைப்ரேஷன் ஆகியவற்றின் நிறமாகும். உங்களுக்கு ஒரு ஆரஞ்சு டெட்டி பரிசாக கிடைத்தால், நீங்கள் சீக்கிரம் காதலுக்குள் விழ போகிறீர்கள் என்று அர்த்தம்.
ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த கிரீன் கலர் டெட்டி பரிசாக வழங்கப்படுகிறது.
நீல நிற டெட்டியை உங்கள் லவ்வர் உங்களுக்கு அளித்தால் அவர் உங்களை பைத்தியமாக காதலிக்கிறார் என்றும் எப்போதும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். இந்த கலர் டெட்டியை பெறுபவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான்.
உலகின் முதல் டெடி வைக்கப்பட்ட இடம்:
அமெரிக்காவில் ஒரு பொம்மைக் கடை வைத்திருக்கும் மோரிஸ் மிட்சோம் என்பவர், ஒரு பொம்மையாக உருவாக்கி அதற்கு டெடி பியர் என்று பெயரிட்டார். இதற்கு ரூஸ்வெல்ட் பெயரிடப்பட்டது. ஏனெனில் ரூஸ்வெல்ட்டின் புனைப்பெயர் 'டெடி' ஆகும். உலகின் முதல் டெடி பியர் இன்னும் இங்கிலாந்தின் பீட்டர்ஃபீல்டில் பாதுகாக்கப்படுகிறது. இது 1984 இல் வைக்கப்பட்டது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.