சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! "சுகர் பாக்ஸ்" ரெடி..!

thenmozhi g   | Asianet News
Published : Feb 28, 2020, 02:06 PM IST
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! "சுகர் பாக்ஸ்" ரெடி..!

சுருக்கம்

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மற்ற வழித்தடங்களில் அடுத்தடுத்த சில தினங்களில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! "சுகர் பாக்ஸ்" ரெடி..! 

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பொழுது பயணிகள் நேரத்தை இனிமையாக செலவழிக்க பயணம் முழுவதும் படங்களை பார்க்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, "சுகர் பாக்ஸ்" என்ற ஒரு செயலியில் wi-fi கனெக்ஷன் மூலமாக பல கேளிக்கை படங்களை பார்க்க முடியும். இந்த செயலியில் உள்ள ஏற்கனவே பதிவிடப்பட்ட படங்கள் காமெடி சீன்ஸ் என அனைத்தும் இருக்கும். மேலும் கன்னடம் மலையாளம் தமிழ் ஆங்கிலம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் காணொளி இருப்பதால் இதனை ஆப் மூலமாக பார்க்கலாம். அல்லது தரவிறக்கம் செய்து கொண்டும் பார்க்கலாம்.

தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மற்ற வழித்தடங்களில் அடுத்தடுத்த சில தினங்களில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது டவர் கிடைக்காமல் இருப்பதால் செல்போன் பயன்படுத்துவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இது போன்ற தருணத்தில் வைஃபை கனெக்ஷன் பயன்படுத்தி மிகவும் ஜாலியாக காமெடி வீடியோக்களை பார்த்துக்கொண்டே பயணம் செய்ய ஏதுவாக இப்படி ஒரு சிறப்பம்சத்தை ஏற்படுத்தியுள்ளது மெட்ரோ நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்