12 ராசியினரில் வங்கி சேமிப்பு யாருக்கு உயரும் தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Feb 28, 2020, 01:41 PM IST
12 ராசியினரில் வங்கி சேமிப்பு யாருக்கு உயரும் தெரியுமா..?

சுருக்கம்

எடுத்த காரியத்தை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அஞ்சல் வழியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். கடன் சுமை குறையும். இடம் மனை வாங்க முற்படுவீர்கள்.

12 ராசியினரில் வங்கி சேமிப்பு யாருக்கு உயரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற மும்முரமாக செயல்படுவீர்கள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். இன்று உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அஞ்சல் வழியில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். கடன் சுமை குறையும். இடம் மனை வாங்க முற்படுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

இல்லம் தேடி பல நல்ல செய்திகள் வந்து சேரும். வங்கி சேமிப்பு நாளுக்கு நாள் உயரும். ஆரோக்கியத்திற்கும் மாற்று மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காக இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மாற்று இனத்தவர்களால் மனதிற்கு பிடித்த செய்தி வந்து சேரும்.

சிம்மராசி நேயர்களே..!

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பழைய பிரச்சினை ஒன்று சுமுகமாக முடியும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். உங்களுக்கு ஆதரவு தருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

சிந்தித்து முடிவெடுக்க கூடிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் அதிகரிக்கும். கடன் சுமை சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகளை செய்யாதீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணம் பற்றிய பேச்சு அடிபடும். தொழில் முன்னேற்றம் திருப்தியாக இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு விஐபிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். 

தனுசு ராசி நேயர்களே...!

விழிப்புணர்வுடன் செயல்படுவதால் பல நல்ல விஷயங்களை செய்யலாம். விருந்தினர் வருகை உண்டு. வரவை விட செலவு சற்று அதிகரிக்கும். யாரிடமும் வாக்கு கொடுத்து செய்ய முடியாமல் தவிக்காதீர்கள். 

மகர ராசி நேயர்களே...!

கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய நாள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்துவேறுபாடு மெல்ல மெல்ல நீங்கும். தைரியத்தோடு எந்த செயலையும் செய்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

தொலைதூரத்திலிருந்து வரும் தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மாறுபட்ட கருத்துடையோர் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

மீனராசி நேயர்களே...!

லாபம் அதிகரிக்கும் நாள். புதிய நண்பர்களை அறிமுகம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!