உஷார்...! உங்க போனில் உள்ள எல்லா ரகசியத்தை திருடும் "spy app"...!

First Published Apr 3, 2018, 6:31 PM IST
Highlights
spy app stolen al the chat history from our mobile


‘ஸ்பை ஆப்’ என்பது என்ன? 

"spy app" என்ற  வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா...ஆம்  நம்முடைய ரகசியத்தை  திருடும் உளவாளி தான் இந்த ஆப்

இந்த ஆப் மூலம், நாம் யாரை கண்காணிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களின் போனில்,இந்த  ஆப் இன்ஸ்டால் செய்து வைத்து  இருந்தாலே  போதுமானது....

அதாவது, இந்த "spy app" நம் மொபைலில்  இன்ஸ்டால் செய்துவிட்டால்,நாம்  செய்யும் அத்தனை நடவடிக்கையும்  யாரோ ஒருவரால்  கண்காணிக்கப் பட்டு வருகிறது என்பதை  மறந்து விடாதீர்கள்...

எப்படி இன்ஸ்டால் செய்வது..?அதாவது எப்படி  இன்ஸ்டால் செய்கிறார்கள் தெரியுமா..?

இந்த ஆப் இன்ஸ்டால் செய்ய  நம் மொபைல் தேவையேபடாது...

உதாரணம்

என் நண்பர் ஒருவரின் ரகசியத்தை கண்காணிக்க வேண்டும் என நினைத்தால்,   அவருக்கு தெரியாமல் அவருடைய மொபைலில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்து விட முடியும்...

அதற்கு தேவையானது,அந்த நபரின் மொபைல் அல்ல...ஜிமெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தால்,இணையதளத்திலிருந்தே உங்கள் போனுக்குள் ‘ஸ்பை ஆப்’பை இன்ஸ்டால் செய்துவிடலாம். 

இதனால் என்ன ஆகும் ?

இந்த ஆப் நம் மொபைலில் இருப்பதே தெரியாது....அதற்கான எந்த அடையாளங்களையும் அறிகுறிகளையும் அது காட்டாது. நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள்,என்ன மெசேஜ் அனுப்புகிறீர்கள், இ-மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப் எனச் சகலத்திலும் உங்களின் செயல்பாடுகளையும் இந்த ஸ்பை ஆப் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க,இதனையெல்லாம் மீறி,உங்கள் மொபைல்   கேமராவை கூட  இயக்க முடியும் என்றால் பாருங்களேன்...

இதன் மூலம்,உச்சமாக,உங்கள் மொபைல் கேமராவை உங்களுக்கே தெரியாமல் இயக்கி,நீங்கள் இருக்கும் இடத்தையும்,உங்களையும் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.ஆனால்,மொபைலில் கேமரா இயங்கிக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் உங்களுக்குத் தெரியாது.

மைக்கை கூட இயக்கலாம்

உங்கள் மொபைலில் உள்ள மைக்கை ஆன் செய்து,நீங்கள் பேசுவது அனைத்தையும்  கேட்க முடியும் என்றால் பாருங்களேன்....

எதற்காக உருவக்கபப்ட்டது இந்த spy app தெரியுமா..?

ஆரம்பத்தில் தம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்..? என்பதை  தெரிந்துக்கொள்ள  தொங்கப்பட்டது.ஆனால் அது காலப்போக்கில் பல நிறுவனங்கள் தங்கள்  ஊழியர்களை கண்காணிக்கவும் தொடங்கியது

நிறுவன ரகசியம் பற்றி வெளியில் கசிகின்றனவா என்பதை கண்காணிக்க  பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இன்று, நம் அந்தரனாக ரகசியத்தை எல்லாம் ஒரு ஆப் மூலமே திருடப் படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்..

உலகமே ஒரு செல்போனில் அடங்கிவிட்டது என்பதை நாம்  ஒவ்வொரு வரும் புரிந்துக் கொண்டு அறவழியில் நடந்தால் தான்,யார் எதை திருடினாலும் நமக்கு எந்த  பிரச்சனை இல்லாமலும் வாழலாம்.

click me!