கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுக்கிறார்களா..? புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை...!

By ezhil mozhiFirst Published Apr 9, 2019, 5:44 PM IST
Highlights

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோடை வெயில் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. பொதுவாகவே கோடை காலத்தில் மக்கள் வெளியில் செல்லவே பயப்படுவார்கள். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும். 

அதையும் மீறி வெளியில் பயணிக்கும் போது தன்னுடன் ஒரு குடையும்  வாட்டர் பாட்டிலும் வைத்துக் கொள்வார்கள். வெயிலின் தாக்கத்திலிருந்து பெரியவர்களே தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும் தருணத்தில் பள்ளி குழந்தைகள் எப்படி சமாளிக்கும்? இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு சில பள்ளிகள் தங்களுடைய பெயர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டுக்கான சிலபஸை விடுமுறை நாட்களிலேயே வகுப்பு எடுக்க திட்டம் தீட்டி கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்  எடுக்கின்றனர். 

இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் தக்க நடவடிக்கை அந்த பள்ளியின் மீது எடுக்கப்படும் என்றும், கோடை விடுமுறை என்பது மாணவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். அதுமட்டுமல்லாமல் உறவினர்களை அறிந்து கொள்வதற்கும், உறவினர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கும் கிடைக்கக்கூடிய நேரம்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக ஒரு சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பட்சத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

click me!