குட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா? போலீஸார் கார் மூலம் வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..!

Published : Sep 03, 2021, 08:51 PM IST
குட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா? போலீஸார் கார் மூலம்  வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..!

சுருக்கம்

அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் உதவி மையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி தந்துள்ளது. 

புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண் காவலர் உதவியுடன் அவர்களது வீடுகளுக்கே அழைத்து செல்ல ஏற்பாடு புதுச்சேரி அரசு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசுகையில்;- அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் உதவி மையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி தந்துள்ளது. புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி அறிமுகமாகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் பெண்களோ, பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்களோ, வெளியூரில் இருந்து வந்துள்ள பெண்களோ தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 112க்கு தொடர்பு கொள்ளலாம்.

காலதாமதமின்றி ஒரு பெண் காவலரோடு நான்கு சக்கர வாகனத்துடன் சென்று அவர் அளித்த முகவரியில் பாதுகாப்புடன் சேர்ப்பார்கள் என 
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்