இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம்..!

Published : Sep 01, 2021, 02:50 PM IST
இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்... வானிலை ஆய்வு மையம்..!

சுருக்கம்

வருகிற 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வருகிற 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்’’என தெரிவித்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்