அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம்... கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்கள்... கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Aug 23, 2021, 3:38 PM IST
Highlights

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக,  குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

இந்தியாவில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

படிப்படியாக குறைந்துவந்த கொரோனா 2வது அலை, சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர் குழு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், ”அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ”, என அந்த குழு  அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, நிபுணர் குழு தெரிவித்ததாவது, “இந்தியாவில், கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம். எனவே, அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக,  குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா பரவல், மீண்டும் அதிகமாகி வருகிறது.  கொரோனா 2வது அலை தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்கக் கூடும். எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றிட வேண்டும். குறிப்பாக, மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனை இருப்பு வைக்க வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தாயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர்கள் , ஆம்புலன்ஸ் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மூன்றாவது கொரோனா அலை அக்டோபரில் உச்சம் தொடும். ஆனால் இரண்டாவது அலையின் தாக்கத்தை விட, மூன்றாவது அவலை குறைவாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!