இந்தியாவில் கொரோனா 3ம் அலை ஏற்படுவது உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 2, 2021, 5:57 PM IST
Highlights

கொரோனா 3வது அலை ஏற்படுவது உறுதி. அதை தடுக்க முடியாது. ஆனால் மாஸ்க் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம். எப்போது, எப்படி 3ம் அலை ஏற்படும் என தெரியாது.

கொரோனா 3வது அலை ஏற்படுவது உறுதி. அதை தடுக்க முடியாது. ஆனால் மாஸ்க் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம் ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கூறியுள்ளது.

கொரோனா 2ம் அலை கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா மரபணு மாற்றங்கள், தடுப்பூசி, மருந்து, உபகரணங்கள் உருவாக்குவதில் ஒன்றிய அரசுக்கு உதவிடும் அறிவியல் மற்றும் தொழில் ஆராயச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் சேகர் மாண்டே, கொரோனா 3ம் அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா 3வது அலை ஏற்படுவது உறுதி. அதை தடுக்க முடியாது. ஆனால் மாஸ்க் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலம் அதன் தீவிரத்தை குறைக்கலாம். எப்போது, எப்படி 3ம் அலை ஏற்படும் என தெரியாது.

ஆனால், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் பொதுமக்கள் காட்டும் சோம்பேறித்தனத்தாலும், புதிய வகை வைரஸ் மாறுபாடுகளாலும் 3ம் அலை ஏற்படும். அதற்குள் நாம் தயாராக வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தற்போது புதிய அலைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. டெல்டா வகை வைரஸ்கள் மிகவும் அபாயகரமானவை என்றாலும், டெல்டா பிளஸ் பெரிய அளவில் கவலை கொள்ளக்கூடியது அல்ல. எனவே, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

click me!