ஆஹா... அசத்தலான 5 திட்டங்கள்... ஜாலியாக ஊர் சுற்ற அழைக்கும் தமிழக அரசு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 21, 2021, 6:03 PM IST
Highlights

தமிழக அரசின் சுற்றுலா துறையே சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் முதல் 8 நாட்கள் வரை திட்டங்களை அறிவித்துள்ளது. 

கொரோனா முதல் மற்றும் 2வது அலை காரணமாக மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வொர்க் ப்ரெம் ஹோம், ஆன்லைன் கிளாஸ், ஆன்லைன் டெலிவரி என மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். கொரோனா ஊரடங்கால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டதை போலவே தமிழக சுற்றுலாத்துறையும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. எனவே சுற்றுலாத்துறையையும், சுற்றுலா தளங்களை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதரங்களையும் காக்கும் பொருட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்களும் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய படியே சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வர ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுலா செல்ல விரும்புவோரை ஊக்குவிக்கும் விதமாக 5 அசத்தலான சுற்றுலா திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலா துறையே சுற்றுலா பயணிகளுக்காக ஒரு நாள் முதல் 8 நாட்கள் வரை திட்டங்களை அறிவித்துள்ளது. 

சென்னை – மாமல்லபுரம் & காஞ்சிபுரம்- மாமல்லபுரம் ஒரு நாள் சுற்றுலா, நவகிரக சுற்றுலா 3 நாட்கள், அறுபடை வீடு சுற்றுலா 4 நாட்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா 8 நாட்கள் ஆகிய சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்ய சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புபவர்கள் சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ttdconline.com என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!