இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை... சம்பளத்தில் மாற்றம்... புதியவிதிகளை கொண்டு வரும் மத்திய அரசு..!

By Thiraviaraj RMFirst Published Sep 1, 2021, 5:01 PM IST
Highlights

அக்டோபர் முதல் புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வர வாய்ப்புள்ளது, இது அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். 

அக்டோபர் முதல் புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வர வாய்ப்புள்ளது, இது அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வரும். முன்னதாக, புதிய ஊதியக் குறியீடு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட இருந்தது, ஆனால் மாநில அரசுகளிடமிருந்து வரைவு விதிகளைப் பெறாததால், அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது, புதிய ஊதியக் குறியீடு அக்டோபரில் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது.இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற அக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.

 

மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.

உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இதுதவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும்.

அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கும் புதிய ஊதியக் குறியீடு பொருந்தும். சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பான விதிகள் மாறும் மற்றும் ஒவ்வொரு தொழில் மற்றும் துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் சமமாக இருக்கும்.
 

click me!