உங்களுக்கு கருப்பான உதடா..? சிகரெட் வேற பிடிக்கிறீங்களா..? 3 நிமிடத்தில் உதடு பிங்க் கலரா மாறுவதை பாருங்க....

By thenmozhi gFirst Published Aug 14, 2018, 7:43 PM IST
Highlights

ஆண்களுக்கு பொதுவாகவே சில பழக்க வழக்கம் இருக்கும். ஒரு சிலர் அதிக அளவில் சிகரெட் பிடிப்பாங்க...ஒரு சிலர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்...இது போன்று பல பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள்.

உங்கள் உதடு கருப்பா அசிங்கமா இருக்கா..? சிகரெட் வேற பிடிக்கிறீங்களா..?

ஆண்களுக்கு பொதுவாகவே சில பழக்க வழக்கம் இருக்கும். ஒரு சிலர் அதிக அளவில் சிகரெட் பிடிப்பாங்க...ஒரு சிலர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள்...இது போன்று பல பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள்.

மேலும், ஒரு சிலர் தொடர்ந்து சிகரெட் பிடித்து வருவார்கள்..இதன் காரணமாக அவர்களின் உதட்டில் கருப்பு நிறமாக மாறி இருக்கும். முகம் முழுக்க கலையாக நல்ல ஸ்கின் டோன் இருந்தாலும், உதடு மட்டும் கருமையாக இருக்கும்...பார்ப்பதற்கு சற்று அசிங்கமாக இருக்கும் என்றே சொல்லலாம். 

பீட்ரூட் சாருடன் சிறிது எலுமிச்சை சேர்த்து, அதனை உதட்டில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவி விட, உதடு மிகவும் அழகாக அருமையான பிங்க் நிறத்தில் இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி சிறிது எடுத்துக்கொண்டு, அதனை உதட்டில் தடவி, பிரஷ் கொண்டு சுழற்சி முறையில் மசாஜ் செய்து பின்னர் சிறிது நேரம் பொருத்து கழுவி விட, உதடு மிக சிறப்பாக இருக்கும். கருமை நிறத்திற்கான அடையாளமே இருக்காது.

சர்க்கரை மற்றும் லெமன்

இதே போன்று சர்க்கரை உடன் சிறிது லெமன் சேர்த்து, அதனை உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து நார்மல் தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, உதடு மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

கிளிசரின் மற்றும் லெமன் பேக்

கிளிசரின் உடன் லெமன் பேக் சேர்த்து நன்றாக கலந்து பின் உதட்டில் தடவி வர, உதட்டில் உள்ள கருமை நிறம் நீங்கி விடும்.

மாதுளைப்பழம் 

மாதுளை பழ ஜூசை உதட்டில் தடவி வர, உதடு மிகவும் அழகாக எந்த வறட்சியும் இல்லாமல்  மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

click me!