மாத்திரை விழுங்கியதும் சீக்கரம் பலன் கிடைக்க எளிய டிப்ஸ்..!!

By Dinesh TGFirst Published Oct 6, 2022, 1:03 PM IST
Highlights

மருத்துவரை மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது என்ன மாத்திரை? எப்போது சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்று தகவல்களை மட்டுமே வழங்குவார். ஆனால்  ஒவ்வொரு மாத்திரையையும் நாம் எப்படி சாப்பிட வேண்டும்? என்கிற வழிமுறைகளை எந்த மருத்துவரும் வழங்குவது கிடையாது. அந்த வகையில் இந்த கட்டுரையில் மாத்திரைகளை எப்படிச் சாப்பிடுவது? அதனால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அநேகமாக மாத்திரையை எப்படி விழுங்க வேண்டும் என்கிற தலைப்பில் நீங்கள் படிக்கும் முதல் கட்டுரையாகவும் இது இருக்கலாம்.
 

உடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
 
உடலுக்கு தேவையான மாத்திரைகளை எப்படி சாப்பிடுவது? என்று தெரிந்துகொள்வது கம்ப சூத்திரம் கிடையாது. ஆனால் எந்த பொசிஷனில் நாம் மாத்திரைகளை சாப்பிடுகிறோம் என்பதை தான், நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும். படுத்துக்கொண்டு மாத்திரையை வாயில் போட்டாலும் அல்லது வலப்புறமான சாய்ந்து மாத்திரையை விழுங்கினாலும் நேரடியாக வயிற்றுக்குள் சென்றுவிடும். ஆனால் படுத்துவிட்டு இடதுபுறமாக மாத்திரை போட்டால், சில சமயங்களில் உடல் உடனடியாக உறிஞ்சு விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மாத்திரை கரையும் வேகம் எப்படி?

கீழே படுத்துக் கொண்டு வலது புறமாக சாய்ந்து மாத்திரை போட்டால் அது 2.3 மடங்கு அதிகரிக்கிறது. வலது பக்கம் சாய்ந்து மாத்திரை போட்டுக்கொண்டால், அது 10 நிமிடங்கள் கழித்து தான் கரைகிறது. ஆனால் மாத்திரையை நேராக நின்று கொண்டு விழுங்கும் போது 23 நிமிடங்களும், இடதுபுறமாக சாய்ந்து மாத்திரை விழுங்கினால் 100 நிமிடங்கள் வரை நேரமாகிறது.

மாத்திரை சாப்பிட்டது என்ன கவனிப்பது?

மாத்திரை சாப்பிடுவதில், அதை எந்த பொசிஷனில் இருந்து சாப்பிடுகிறோம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பாட்டுக்கு முன் மற்றும் சாப்பாட்டுக்கு பின் என்கிற வகையில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு காரணம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதையும், கொடுக்கப்பட்ட மருந்து செரிமானம் ஆகுவதையும் கணக்கில் வைத்து மாத்திரை விழுங்குவதற்கான நேரம், காலம் மற்றும் பொசிஷன் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிமேல் தலைக்கு குளிக்க ஷாம்பூ வேண்டாம்- இது இருந்தால் போதும்...!!

உடலுக்குள் மாத்திரை எப்படி பணி செய்கிறது?

நாம் உட்கொள்ளும் பெரும்பாலான மாத்திரைகள் முழுமையாக கரைந்த பின் தான், வேலை செய்கின்றன. அதற்கு சில நேரம் எடுக்கும். மாத்திரை சாப்பிட்டவுடனே பலன் எதுவும் கிடைக்காது. மாத்திரையில் சேர்க்கப்பட்டுள்ள மூலப் பொருட்கள் அனைத்தும் குடல் பகுதியில் சென்றடையும். அதை தொடர்ந்து தான் மாத்திரை மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் ஒவ்வொன்றாக வரும். குறிப்பாக, வயிற்றின் அடிப்பகுதியான ஆண்ட்ரம் பகுதியை நோக்கி மாத்திரை சென்றால் மிக விரைவாக கரைந்து விடும்.

கூர்மையான நினைவாற்றலை பெறுவதற்கு வேண்டிய 5 உணவு பழக்கவழக்கங்கள்..!!

விரைவாக வேலை செய்தால் தான் மாத்திரையா?

நம்மில் பலருக்கு மாத்திரை போட்டவுடன், உடல்நிலை சரியாகிவிட வேண்டும் என்று எண்ணம் உள்ளது. ஒருவேளை நீங்கள் அப்படி எண்ணினால், சரியான பொசிஷனில் மாத்திரை எடுத்துக் கொள்வது உதவியாக இருக்கும். சூடான தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் மாத்திரை சாப்பிடுவது நல்ல பயனை தரும். இப்படி உட்கொண்டால் மாத்திரை விரைவாகவே கரைந்து வேலை செய்யும்.
 

click me!