உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்யலாம்..? அடுகடுக்கான டிப்ஸ் இதோ..!!

By Dinesh TGFirst Published Dec 10, 2022, 9:08 PM IST
Highlights

அதிகப்படியான உப்பு காரணமாக, உணவு சுவையில்லாமல், துவர்ப்பாக இருக்கும். உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அதை பல வழிகளில் கையாளலாம். உணவில் உப்பின் அளவைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

உணவின் சுவையை அதிகரிப்பதில் உப்புக்கு முக்கிய பங்குள்ளது. குறிப்பிட்ட உணவில் உப்பு குறைவாக இருந்தாலோ அல்லது மிகையாக இருந்தாலோ, அந்த பணடமே வீணாகிவிடும். உணவில் அதிக உப்பு இருந்தால், அதைக் கையாள்வது மிகவும் கடினம் என்பது தான் உண்மை. அதிகப்படியான உப்பு காரணமாக, உணவு சுவையில்லாமல், துவர்ப்பாக இருக்கும். உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அதை பல வழிகளில் கையாளலாம். உணவில் உப்பின் அளவைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு

ஒருவேளை நீங்கள் சமைத்த உணவில், உப்பு அதிகமாகிவிட்டால், அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி போட்டு விடுங்கள். இது உணவில் உள்ள அதிக உப்பை உறிஞ்சிவிடும். அதற்கு முன்னதாக உருளைகளை நன்றாக கழுவ வேண்டும். தோலூரித்து குழம்பில் போடும் போது, சீக்கரமே கிழங்கு உப்புச்சுவை உறிஞ்சுவிடும்.

மாவு உருண்டைகள்

உங்கள் உணவின் அளவிற்கு ஏற்ப மாவு உருண்டைகளை பிசைந்துகொள்ளுங்கள். இதை உப்பு அதிகமான உணவில் போடவும். அதன்மூலம் மாவு உருண்டைகள் உணவின் அதிகப்படியான உப்பை உறிஞ்சிவிடும். உணவை பரிமாறும் முன் இந்த மாவு உருண்டைகளை வெளியே எடுக்கவும். பருப்பு அல்லது கீரை சமையலில், உப்பு அதிகமாகி சேர்க்கப்படும் மாவு உருண்டைகளை, நீங்கள் அப்படியே சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து கிடைக்க வேண்டிய ஆசைப்பட்டு முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ஃபிரெஷ் க்ரீம்

குழம்பில் உப்பின் அளவைக் குறைக்க ஃப்ரெஷ் க்ரீமையும் பயன்படுத்தலாம். இது உப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் கறியை க்ரீமியர் ஆக்கும். இதன்மூலம் சுவை பன்மடங்கு அதிகரித்துவிடும். இதுதவிர உணவில் உப்பு அதிகமாக இருந்தால், அதனுடன் 1 தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம். அதை 5 நிமிடங்கள் சமைக்கவும். இதனால் உப்பு சுவை குறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு

இந்திய, முகலாய், சைனீஸ் உணவுகளில் உப்பு அதிகமாக இருந்தால், எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம். இதற்கு சாதத்தில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இது அதிக உப்பை உடனடியாக உறிஞ்சிவிடும்.

click me!