Cooking Tips : அட சமையலுக்கு தேவையான சூப்பரான சில ஐடியாக்கள்!! ட்ரை பண்ணி பாருங்க

Published : Sep 16, 2025, 03:50 PM IST
simple cooking tips and tricks

சுருக்கம்

Cooking Tips : உங்களது சமையலை எளிதாகவும், சுவையாகவும் மாற்ற உதவும் சூப்பரான சில சமையல் குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமையல் என்பது கலை என்றாலும் பலருக்கு அது மிகப்பெரிய சுமையாகவே இருக்கும். இன்னைக்கு என்ன சமைக்கலாம்? எப்படி சமைக்கலாம்? என்று அது குறித்த யோசனைகள் தான் அதிகமாகவே இருக்கும். ஒருவேளை அப்படி சமைத்தாலும் அது நன்றாகவே இல்லை என்று வீட்டில் உள்ளவர்கள் குறை சொல்லுவதுண்டு. ஆனால் சமையலில் சில ரகசியங்களை தெரிந்தால் போதும், சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றிவிடலாம் தெரியுமா? அதற்கான சில குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்களது சமையலை எளிதாகவும், சுவையாகவும் மாற்றி அசத்துங்கள்.

குக்கிங் டிப்ஸ்கள்:

1. கீரை சமைக்கும் போது கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை நிறம் மாறாமல் பச்சை பசேல் என்று இருக்கும்.

2. தக்காளி வதக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் அதன் நிறம் மாறாது. வித்தியாசமான சுவையையும் கொடுக்கும்.

3. குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் ஒரு ஸ்பூன் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் ஒரு உருளைக்கிழங்கு சேர்க்கவும்.

4. இட்லி பூ மாதிரி வர இட்லி மாவில் 4-5 பச்சை அப்பளத்தை தண்ணீர் விட்டு அரைத்து மாவில் சேர்த்து கலந்து பின் இட்லி அவிக்கவும்.

5. சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்து விட்டால் பெரிய வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து பிறகு எப்போதும் போல தேய்த்துக் கழுவுங்கள். அடிபிடித்த சுவடே இருக்காது.

6. கிரேவி, குருமா சமைக்கும் போது தோல் உரித்த வேர்க்கடலையை 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு மையாக அரைத்து கிரேவியுடன் சேருங்கள். செம டேஸ்டியான கிரேவி ரெடி!

7. குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேக வையுங்கள். இரவு வரை சாம்பார் கெடாமல் இருக்கும்.

8. குழம்பில், கிரேவியில் காரம் அதிகமாகி விட்டால் அதில் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். பாலில் இருக்கும் சத்துக்கள் காரத்தன்மையை குறைக்கும்.

9. உளுந்த வடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும் போது யாரில் முதலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விடுங்கள். பிறகு உளுந்தம் பறவை போட்டு அரைக்கவும். இப்படி செய்தால் மாவு ஜாரில் ஒட்டிக் கொள்ளாது, சுலபமாகவும் எடுக்கலாம். அது போல உளுந்த வடை செய்யும்போது அதனுடன் சிறிதளவு சேமியா தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

10. இட்லி தட்டிலிருந்து இட்லியை சுலபமாக எடுக்க தட்டை திருப்பி போட்டு அதன் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்தால் இட்லி தட்டில் ஒட்டாமல் சுலபமாக எடுத்து விடலாம்.

11. உப்புமா மீந்துவிட்டால் அதை குப்பையில் போடாமல், ஒரு பாத்திரத்தில் மைதா மாவில் எண்ணெய் சேர்த்து பிசைந்து அதில் உப்புமாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மாவின் உள்ளே வைத்து காரா போளி போல செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

12. பருப்பு, பீன்ஸ் வேக வைக்கும் போது உடனே உப்பு சேர்க்க வேண்டாம். இல்லையெனில் வேக அதிக நேரம் எடுக்கும்.

13. பக்கோடாவை கடலை மாவில் செய்வதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவில் செய்யுங்கள். சுவையாகவும் இருக்கும். வயிற்று பிரச்சனைகள். வராது.

14. பாகு காய்ச்சும் போது பாகு பதம் வந்தவுடன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் பாகு முறியாது.

15. பால் பாயசம் பண்ணும்போது பாதாம் பருப்பை மையாக அரைத்து அதில் சேர்த்தால் பாயாசம் செம்ம டேஸ்ட்டியாக இருக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க