டெங்கு பாதிப்பு பற்றி யாரும் அறியாத ஒரு விஷயம் என்ன தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jul 24, 2019, 4:58 PM IST
Highlights

மழைக்காலம் தொடங்கிய உடன் ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்து, நோய் பரப்ப தொடங்கி விடும். ஆண்டுக்கு ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அரசும்  பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

டெங்கு பாதிப்பு பற்றி யாரும் அறியாத ஒரு விஷயம் என்ன தெரியுமா..? 

மழைக்காலம் தொடங்கிய உடன் ‘ஏடிஸ்’ கொசுக்கள் சுதந்திரமாக இனப்பெருக்கம் செய்து, நோய் பரப்ப தொடங்கி விடும். ஆண்டுக்கு ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அரசும்  பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

இன்னும்  சொல்லப்போனால், கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து  டெங்கு காய்ச்சலினால் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் மத்திய அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, அதன் பாதிப்பை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். 

தமிழகத்தில் மட்டும்  2010-ம் ஆண்டு - 2051, 2011  ஆம் ஆண்டு - 2501, 2012 ஆம் ஆண்டு -12826, 2013  ஆம் ஆண்டு - 6122,  2014 ஆம் ஆண்டு - 2804, 2015 ஆம் ஆண்டு - 4535, 2016 ஆம் ஆண்டு - 2531 நபர்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் அதிக நபர்கள் டெங்கு காய்ச்சலால், பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த  குறிப்பிட்ட ஆண்டு மட்டும் மொத்தம் 23,294 பேர் பாதிக்கபட்டனர், 65 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டில், இதுவரை டெங்கு காய்ச்சலினால் தமிழகத்தில் 104 பேர் உயிரிழந்துள்ளதாக ஏற்கனவே சுகாதாரத்துறை இணையதளத்தில் தகவல் உள்ளது. 

பொதுவாகவே, என்னதான் டெங்குவை தடுக்க பல வழிமுறைகளை  அரசு எடுத்து வந்தாலும், ஆண்டுக்கு ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும், நம்மை  நாம் எப்படி பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்து உள்ளது.

click me!