1 ஆம் தேதி முதல் அத்திவரதரை இப்படி தான் தரிசிக்க முடியும்..!

By ezhil mozhiFirst Published Jul 24, 2019, 1:10 PM IST
Highlights

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. 

1 ஆம் தேதி முதல் அத்திவரதரை இப்படி தான் தரிசிக்க முடியும்..! 

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசிப்பதற்காக தினந்தோறும் 2 லட்சம் பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு சென்று வருகின்றனர்.

பொதுவாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் 24 நாட்கள் சயனக்கோலம் அதாவது அத்திவரதர் படுத்தவாறு காட்சி கொடுப்பார். பின்னர் நின்ற கோலத்தில் காட்சி கொடுப்பார். ஆனால் சிலையின் உறுதி தன்மையை பொறுத்து ஆகஸ்ட் 1முதல் நின்ற கோலத்தில் தரிசனம் கொடுப்பார் என நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பக்தர்களுக்காக 2500 மீட்டர் நிழற்குடைகள், 800 மீட்டர் பிரமாண்ட பந்தல், 750 வீல் சேர் என சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இதுவரை 30 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளதாகவும், இது தவிர ஒரு நாளைக்கு ரூபாய் 300 கட்டணத்தில் 2000 நபர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

கடந்த 18ம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வந்த அரசு, தற்போது பக்தர்களுக்கு ஏதுவாக சில ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!