கொசு அதிகமாயிடுச்சு..! டெங்குக்கான அறிகுறி இதுதான்...!

Published : Aug 06, 2019, 06:50 PM IST
கொசு அதிகமாயிடுச்சு..! டெங்குக்கான அறிகுறி இதுதான்...!

சுருக்கம்

மூக்கு மற்றும் வாய் வழியாக இரத்தம் வரும். குழந்தைகள் கருப்பு நிறத்தில் மலம் கழிப்பர். சிறுநீரிலும் இரத்தம் சேர்ந்து வரும். உடலில் இரத்தப் புள்ளிகள் தோன்றும். 

கொசு அதிகமாயிடுச்சு..! டெங்குக்கான அறிகுறி இதுதான்...! 

டெங்கு வந்தால் அதற்கான அறிகுறிகளும், சரி செய்யும் சில வழி முறைகளையும் இங்கே பார்க்கலாம். 

1.குழந்தைகளுக்கு டெங்கு வந்தால் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும். உடல் வலி, கண்களைச் சுற்றியும் வலி இருக்கும். வாந்தி எடுப்பர். 

2.. மூக்கு மற்றும் வாய் வழியாக இரத்தம் வரும். குழந்தைகள் கருப்பு நிறத்தில் மலம் கழிப்பர். சிறுநீரிலும் இரத்தம் சேர்ந்து வரும். உடலில் இரத்தப் புள்ளிகள் தோன்றும். 

3.. மூட்டு மற்றும் தசை வலி உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி இருக்கும். 

4.. பசியிண்மையும் இருக்கும். தொண்டைப்புண், பல் ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும். 

தீர்வுகள்:

1.. உடல் சோர்வாக இருக்கும்போது அதிக நீர்ச்சத்து தேவைப்படும். எனவே, தண்ணீர், பழ ஜூஸ்கள் கொடுப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

2.. கொசுக்கள் மூலமாக பரவும் டெங்குவை வராமல் தடுக்க வீட்டுக்கு வெளியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.  குழந்தைகள்           உறங்கும்போது கொசுவலையை பயன்படுத்தலாம்.

3.. டெங்கு பாதிப்பு இருக்கிறது என்று சந்தேகம் வந்தால் கூட உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

4.. குழந்தைகளுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்புச் சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!