காமவெறியர்களை பிடிக்க வந்துவிட்டது "Anti Rape Gun"..! பட்டனை அழுத்தினால் "டமால்" தான்...!

By ezhil mozhiFirst Published Dec 17, 2019, 3:25 PM IST
Highlights

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி  வருகிறது. 

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கையை அரசு எடுத்து வந்தாலும், அதற்காக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வந்தாலும் இன்னும் ஆங்காங்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று தான் வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்வது முதல் உயிருடன் எரித்து கொலை செய்யும் அளவிற்கு தான் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. 

இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டாலும், இதற்கு உடனடியாக என்ன தீர்வு என்பது குறித்த கேள்வி தான் மேலோங்கி உள்ளது.  இந்த ஒரு நிலையில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது உடனடியாக அந்தப் பெண்ணை மீட்பதற்கு பேருதவியாக "காவலன் செயலி" -ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு பெண் பாதிக்கப்படும்போது இந்த செயலியில் உள்ள பட்டனைஅழுத்தினால் போதும். அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், அப்பெண்ணுக்கு தேவையான மிக முக்கிய மூன்று எண்களுக்கும் விவரம் தெரிந்துவிடும்.

அதன்பிறகு அதுவாகவே 15 நொடிகள் கடந்த பின்பு வீடியோ ஆன் ஆகி பதிவாகும்.இதன் மூலம் அங்கு நடக்கக்கூடிய அனைத்து விவரமும் தெரிய வரும். இப்படி ஒரு தருணத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்த ஷ்யாம் சௌராசியா என்பவர் ஒருவிதமான பர்சை தயார்ப்படுத்தி உள்ளார். இந்த பர்சில் டிரகர் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு "ஆன்ட்டி ரேப் கன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பர்சில் ப்ளூடூத் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆபத்து காலங்களில் இந்த பர்சில் உள்ள பட்டனை அழுத்தினால், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும், ஏற்கனவே சேவ் செய்து வைத்துள்ள அந்த பெண்ணுக்கு தேவையான முக்கிய நபருக்கு தகவல் அனுப்பிவிடும். மேலும் இந்த பட்டனை அழுத்தும் போது பயங்கரமான சப்தம் வெளியேறுவதால் அருகில் உள்ளவர்களும் அதனை புரிந்துகொண்டு உடனடியாக விரைந்து வந்து அப்பெண்ணை காப்பாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!