மீண்டும் தொட்டது சவரன் ரூ.29 ஆயிரம்...! தங்கம் விலை குறையவே குறையாதா..?

Published : Dec 17, 2019, 11:40 AM IST
மீண்டும் தொட்டது சவரன் ரூ.29 ஆயிரம்...! தங்கம் விலை குறையவே குறையாதா..?

சுருக்கம்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

மீண்டும் தொட்டது சவரன் ரூ.29 ஆயிரம்...! தங்கம் விலை குறையவே குறையாதா..? 

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.24 உயர்ந்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3625 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ. 30 பைசா அதிகரித்து 47.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில், மீண்டும் 29 ஆயிரத்தை எட்டி  உள்ளது. இதன் மூலம் சவரன்  விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்துகிறது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

30 Days Without Alcohol: 30 நாள் மது அருந்தாமல் இருந்தால் உடம்புல என்னலாம் மேஜிக் நடக்கும் தெரியுமா?
Cleaning Hacks: தண்ணீர் பைப் உப்புக்கறை போகணுமா? 'இந்த' ஒரு பொருள் போதும்.. அசத்தல் கிளீனிங் டிப்ஸ்!