
காலை சிற்றுண்டி எடுப்பதை ஏன் தவிர்க்க கூடாது ?
இன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடுகிறார்கள். ‘காலை வேளைக்கும் சேர்த்து மதியம் சாப்பிடுவதாக ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள் . ஆனால் காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறு என்பது தான் உண்மை
ஏன் அவசியம் காலையில் சாப்பிட வேண்டும்?
இரவு உணவுக்குப் பின்னர் 6 முதல் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாகச் செயல்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது.அதிலும் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலைச் சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும்.
மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கிறது. காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
சிற்றுண்டியை தவிர்த்தால் ஏற்படும் விளைவுகள் :
காலைச் சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதயநோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.