வித்தியாசமான தயிர் பொங்கல் வைப்பது எப்படி ?

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
வித்தியாசமான   தயிர்  பொங்கல் வைப்பது எப்படி ?

சுருக்கம்

தயிர் பொங்கல்:

வேலூர் மாவட்டம், தர்மராஜா கோவிலில் வழங்கபடும்  இந்த  தயிர்  பொங்கல் மிகவும்  பிரசித்தி பெற்றது. அனைவராலும் விரும்பி  சாப்பிட கூடிய  ஒரு பொங்கல்.நாளை போன்கள் திருநாளையொட்டி , வித்தியாசமாக  தயிர் போன்கள் வைக்கலாம் வாங்க 

தேவையான பொருட்கள்:
புது பச்சை அரிசி 1 கப்
பாசிப்பருப்பு 1/4 கப்
பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் 2 கப் 
கெட்டியான புளிப்பற்ற தயிர் 1 3/4 கப்
உப்புத்தூள் தேவையான அளவு

தாளிக்க
முந்திரி பருப்பு 15
பசுநெய் 2 மேஜைக்கரண்டி
குருமிளகு 2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
வரமிளகாய் 1

செய்முறை:

1. பச்சை அரிசியை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2. பிரஷர் குக்கரில் ஊற வைத்துள்ள பச்சை அரிசியை போட்டு , பாசிப்பருப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து , அதில் இஞ்சி விழுது, பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து , தேவையான அளவிலான உப்புத்தூளையும் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும். 

3. பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக 6 விசில் விட்டுகோங்க. 

4. பின்னர் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து அதை நன்றாக கிளறி விட்டு, மின் காத்தாடி கீழ் வைத்து நன்றாக ஆற வைக்கவும்.

5. நன்றாக ஆறியவுடன் கெட்டியான புளிப்பற்ற தயிரை சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

6. பிறகு வடசட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் சீரகம் சேர்த்து பொறியிய ஆரம்பித்ததும், அதில் குரு மிளகு சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும், பின்பு அதில் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

7. பிறகு அந்த வடச்சட்டியில் உள்ள தாளிப்பை அந்த அரிசி தயிர் சாத கலவையில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும். தேவையான அளவிலான உப்பு தேவையெனில் சேர்த்து நன்றாக கிளறி எடுத்துபரிமாறவும் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!