ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள் ?

 
Published : Jan 12, 2017, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை அதிகம் விரும்பி  சாப்பிடுபவர்களா  நீங்கள் ?

சுருக்கம்

ஹோட்டலில் வெங்காயம் தூவிய உணவை விரும்பி சாப்பிடுபவரா? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன  தெரியுமா ?

பொதுவாக நம்மில் நிறைய பேர்கள் வீட்டிற்கு வெளியே வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை சாப்பிட ஆசைப்படுவர்கள். அப்படி சாப்பிடும் போது விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியம். இதற்குக் காரணம் இருக்கிறது. 

பொதுவாக நம் பாட்டி வைத்தியத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு காய்ச்சலிலிருந்து விரைவாக விடுபட நோயாளியின் தலையின் இருபக்கமும் பாதியாக வெட்டிய பெரிய வெங்காயத்தை வைப்பார்கள்.இந்த வெட்டிய வெங்காயமானது நோயாளியின் கிருமிகளை இழுத்துக்கொள்ளும்! இதனால் நோயாளி விரைவாக காய்ச்சலிலிருந்து விடுபடுவார்

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெட்டிய வெங்காயம் அதன் அருகில் உள்ள கிருமிகளை வெகு விரைவாக இழுத்து வைத்துக்கொள்ளும் என்பதைத்தான்.ஹோட்டல்களில் வெங்காயத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தரம் குறைந்த ஹோட்டல்களில் அன்றைய தினம் தேவைப்படும் வெங்காயத்தை அனைத்தையும் அன்றைய தினம் அதிகாலையிலேயே பொடியாக வெட்டி வைத்து விடுவார்கள்

கிட்டதட்ட அந்த வெட்டிய வெங்காயம் இரவு ஹோட்டல் மூடும் வரை பயன்படுத்தும் விதமாகவே தேவையான அளவிற்கு வெட்டி வைத்திருப்பார்கள்! இது காலை முதல் இரவு வரை சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் அந்த வெட்டிய வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்

அதுவும் ரோட்டோரம் திறந்த சாக்கடை இருக்கும் பகுதியில் இந்த வெட்டிய வெங்காயம் இருக்குமாயின் கிருமி கூட்டம் வெங்காயத்தில் நிச்சயம் இருக்கும்

நாம் ஹோட்டலுக்கு சென்று ஒரு ஆனியன் ஊத்தப்பம் அல்லது ஆனியம் தோசை கேட்கும்போது ஊத்தப்பத்தை ஊற்றி அதன் மேலே இந்த வெங்காயத்தை தூவிவிடுவார்! என்னதான் அந்த ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டாலும் தூவிய வெங்காயம் அனைத்தும் வெந்துவிட வாய்ப்பில்லை. இதனால் வெங்காயத்தில் இருந்த கிருமிகள் முழுவதுமாக அழிவதில்லை

அதோடு மிதமான வெப்பத்தில் அழியாத கிருமிகள் மளமளவென்று இனப்பெருக்கமாகிவிடும்

இப்படி கிருமிகளின் இனப்பெருக்கமான நிலையில் நம் வெங்காயப் பிரியர் குறிப்பிட்ட நோய்க் கிருமியை உள்வாங்கிக் கொள்கிறார்! அதன் பலனை ஓரிரு நாளில் ஏற்படும் ஆரோக்கிய குறைவால் அனுபவிப்பார்.இதுபோலவே, வெங்காயம் போட்ட முட்டை ஆம்லெட்டும் அதன் வேலையை செய்ய ஆரம்பிக்கும். 

ஆகவே, வீட்டிற்கு வெளியே வெங்காயம் தூவிய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?