
பர்ஸ் வைக்க இடமில்லாத புது சட்டை......!!! இளைஞர்கள் வரவேற்பு ......!!!
பணம் கையில் எடுத்து சென்று பயன்படுத்தும் பழக்கத்தை மெல்ல மெல்ல விட்டுவிட்டு, முழுமையாக டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு மாற வேண்டும் என , பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிகபட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.....
இதன் தொடர்ச்சியாக, செல்போன் மூலம் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இனிவரும் காலங்களில், கார்டு இருந்தால் மட்டுமே போதும் என்ற நிலை உருவாகும் என்பதால், அதனை வெளிப்படுத்தும் விதமாக, பாக்கெட் இல்லாத சட்டை தற்போது அறிமுகமாகி உள்ளது.....
அதாவது, இனி வரும் காலங்களில் , ஆண்கள் அணியும் சட்டையில் பாக்கெட் தேவைப்படாது என்றும், ஒரு பேனா வைக்க மட்டும் சட்டையில் இடம் இருந்தால் போதும் என்பதை விளக்கும் விதமாக, தைக்க ப்பட்டுள்ளது........
இந்த சட்டை மாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.