பிரதமர்  அலுவலகத்தில் பயிற்சி.....!!!

First Published Nov 28, 2016, 7:05 PM IST
Highlights


பிரதமர்  அலுவலகத்தில் பயிற்சி.....!!!

பணம்  கையில்  எடுத்து சென்று  பயன்படுத்தும்  பழக்கத்தை  மெல்ல  மெல்ல விட்டுவிட்டு,  முழுமையாக டிஜிட்டல் இந்தியா  திட்டத்திற்கு மாற  வேண்டும் என , பிரதமர்  மோடி  தெரிவித்து  வருகிறார்.

இந்நிலையில்  கருப்பு  பண   ஒழிப்பு தொடர்பாக,  பழைய  ரூபாய்  நோட்டுகளுக்கு தடை  விதிகபட்டு பல  முக்கிய  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.....

இதன்  தொடர்ச்சியாக,  செல்போன் மூலம் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும்  பொருட்டு பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா ஆகியோர் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதாவது,  செல்போனில் உள்ள யுபிஐ மற்றும் ஈ-வாலட்ஸ் அப்ளிகேஷன் பயன்படுத்துவது, செல்போனில் எவ்வாறு ஏப் பதிவிறக்கம் செய்வது, எப்படி பணம் செலுத்துவது என்று பயிற்றுவித்து  வருவதாக  செய்திகள்  வெளியாகி உள்ளது.

மேலும், இந்த பயிற்சியில் அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். எஸ்பிஐ அதிகாரிகளும் இந்தப் பயிற்சியில் கலந்து க் கொண்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும்  காலங்களில்,  அனைத்து  மக்களும் , பணபரிவர்த்தனையை மொபைல் மூலமே  செய்யும் நிலை  மிக விரைவில்  வரும்  என  எதிர்பார்க்கப்படுகிறது......

click me!