விரைவில் வருகிறது Facebook WiFi..!!!

First Published Nov 28, 2016, 2:54 PM IST
Highlights


பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு வைஃபை சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் சமூக வலைத்தளம் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு WiFi சேவை வழங்கும் நோக்கில் 'Express Wifi' என்ற புதிய திட்டத்தை தீட்டி வருகிறது. இன்டர்நெட் வசதி இல்லாத பகுதிகளுக்கு இன்டர்நெட் சேவையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் இணைய இணைப்பை அதிகரிக்க இந்த எக்ஸ்பிரஸ் வைஃபை சேவையை பறக்கும் விமானங்களில் ‘லேசர் ட்ரான்ஸ்’ என்ற தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து விரிவான தகவல் வெளியாகும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

‘எக்ஸ்பிரஸ் வைஃபை’ அறிமுகப்படுத்தப்பட்டால், பேஸ்புக்கின் இதற்கான பிரத்யேக அப்ளிகேஷன் மூலம் வைஃபை வசதியை எளிதாக பெறமுடியும் என்று பேஸ்புக் குறிப்பிட்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் – ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து Internet.Org என்ற சேவையை வழங்கியது குறிப்பிடதக்கது.

click me!