
மத்திய அரசு தொடர்ந்து பல முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது.உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு முதலே, ஆதார் எண்ணை வங்கி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது.
காஸ் மானியம் பெற கூட , ஆதார் கட்டாயமானது. இந்நிலையில், ஆதார் எண்ணை பதிவு செய்யாததால் , குடும்ப அட்டையை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தற்போது, மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1500 குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிரடி நடவடிக்கையை, மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ஜீவா மேற்கொண்டுள்ளார்.இதில், முன்னாள் எம்.பி.சித்தனின் குடும்ப அட்டையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னரும் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்......
இதனால், இதுவரை ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள் , பதிவு செய்து விடுங்கள்.....!!!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.