இதயத்திற்கு வலு சேர்க்கும்  “ வயாகரா ”....!

 
Published : Nov 27, 2016, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
இதயத்திற்கு வலு சேர்க்கும்  “ வயாகரா ”....!

சுருக்கம்

இதயத்திற்கு வலு சேர்க்கும்  “ வயாகரா ”....!

வயாகரா மாத்திரை  என்றாலே, பாலுறவிற்கு மட்டுமே  பயன்படுத்தபடுகிறது  என  அறிந்த நமக்கு , தற்போது  பல  தகவல்  கிடைத்து இருக்கிறது.

 சொல்லப்போனால், இந்த மாத்திரையை வைத்து,  பல  சோதனைகள்  செய்யப்பட்டு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னணி விஞ்ஞானி ஆண்ட்ரூ டிராஃபோர்ட், இதயத்தை பலப்படுத்த உதவும் வயாகரா குறித்து ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

அதன்படி, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சுமார் 6,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு வயாகரா மாத்திரை வழங்கி ஆய்வு நடத்தி உள்ளனர்.  மேலும், நீரிழிவு நோயாளிகள் தவிர, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் சாதாரணவர்களை விட இம்மாத்திரையை உட்கொண்டவர்களின் இதயம் சீராக இயங்குவதாக ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

வயாகரா மாதிரியில்   என்ன இருக்கிறது ....?

வயாகரா மாத்திரையில் பி.டி.இ. 5ஐ என்ற முக்கிய வேதிப்பொருள், முக்கிய என்சைம்களை தடுத்து, மிக மெலிதான திசுக்களை விரிவடையாமல்  தடுக்கிறதாம்.  இதனால், இதயம் விரிவடையாமல் ஒரே அளவில் இருக்க உதவுகிறதாக  தெரிகிறது. இதன் விளைவாக  மாரடைப்பு   வராமல்  தடுக்கப்படுகிறது  என  ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!