
கசிந்தது தகவல் : ஜியோ !!! மாத கட்டணம் 499 ரூபாயா ....???
ஜியோ வை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது....!
அந்த அளவுக்கு பல சலுகையை வாரி வாரி வழங்கியது ...!!!
ப்ரீ 4 ஜி டேட்டா , அதுவும் கூட அன்லிமிடெட், ப்ரீ கால்ஸ் என பட்டியல் நீளும்.......
ஆனால் , இந்த சலுகையெல்லாம் மூன்று மாதங்கள் மட்டுமே என ஏற்கனவே அறிவித்து இருந்தது ஜியோ.....{ அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை )
இந்நிலையில், டவர் பிரச்னை ஆங்காங்கே இருப்பதால், சிலரால் சரிவர பயன்படுத்த முடியவில்லை என எழுந்த புகாரை அடுத்து, மேற்குறிப்பிட்ட சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது ( மார்ச் 2017 }
இது குறித்த முக்கிய முடிவுகள், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது. இந்நிலையில், ஜியோ ஏற்கனவே அறிவித்த சலுகை காலம் முடிந்த பின், மாதம் மாதம் நிரந்தர கட்டணமாக ரூபாய் 499 நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.....
மேலும், தேவைகேற்றாற்போல், இரண்டாயிரம் ரூபாய் கூட மாத கட்டணமாக செலுத்தி ஜியோ சலுகையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் LYF மொபைல் பயன்படுத்தினால் மட்டும் :
குறிப்பு : இவை அனைத்தும் , ரிலையன்ஸ் நிறுவனத்தின் LYF மொபைல் வாங்கி பயன்படுத்தினால், தொடர்ந்து இந்த சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.